கும்பகோணம், ஜூன் 16- கும்பகோணத்தில், மனிதநேய ஜனநாயக கட்சி திருபுவனம் கிளை மற்றும் மீனாட்சி மருத்துவமனை சார்பில் ரத்ததானம், இலவச மருத்துவ முகாம் மாநிலச் செயலாளர் ராசுதீன் தலைமையில் நடைபெற்றது. முகாமை திமுக சட்டமன்ற உறுப்பினர் கோவி.செழியன் துவக்கிவைத்தார் இதில் நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர். 50க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் வழங்கினர். மாவட்ட பொருளாளர் இக்பால்சேட் மருத்துவர் அணி மாவட்ட செயலாளர் முகமது அலி இந்திய மாணவர் கழகம் மாவட்ட செயலாளர் முஹம்மது தவ்பீக் நகர பொருளாளர் ஜெகபர் அலி கலந்து கொண்டனர்.