தஞ்சாவூர் பேராவூரணி அருகே அம்மையாண்டியில், மு.ந.வைத்தியநாதன்- முனியம்மாள் கல்வி அறக்கட்டளை, தஞ்சை மீனாட்சி மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. ஊராட்சி தலைவர் மல்லிகை வை.முத்துராமலிங்கம் தலைமை வகித்தார். நுரையீரல் சிறப்பு மருத்துவர் அருண், டாக்டர்கள் குருநாதன், சூர்யா, சுபசிமா மருத்துவக் குழுவினர் பரிசோதனை செய்தனர். முகாமில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.