கும்பகோணம், ஜூன் 8- கொரானா நோய் தொற்று காரண மாக கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக 144 ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் திரு விழாக் கடை வியாபாரிகள் மிக கடுமை யாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஊரடங்கு சமயத்தில் அனைத்து வழிபாட்டு தலங்களும் திறக்கப்ப டாத சூழ்நிலையில் அனைத்து திரு விழாக்களும் ரத்து செய்யப்பட்டதால் வருடத்திற்கு பங்குனி சித்திரை வைகாசி மூன்று மாதங்கள் மட்டுமே வருமானம் ஈட்டி அந்த ஆண்டு முழுவதும் வாழ்க்கையை திருவிழா கடை வியாபாரிகள் நடத்தி வந்தனர். இந்நிலையில் வழிபாட்டுத் தலங்கள் மூடப்பட்டதால் வருமான மின்றி பசியும் பட்டினியுமாக இருந்து வருகின்றனர்.
ஆகவே திருவிழாக் கடை வியாபாரிகள் வாழ்வாதாரம் காப்பதற்கு கொரோனா கால நிவாரண மாக மாதம் 15 ஆயிரம் ரூபாய் வழங்கி டவும், கூட்டுறவு துறை அமைச்சர் அறி விப்பின்படி திருவிழா கடை வியாபா ரிகளுக்கு கூட்டுறவு வங்கி மூலம் 50 ஆயிரம் ரூபாய் தனிநபர் கடன் வழங்கி வறுமையில் வாடும் திருவிழா கடை வியாபாரிகளை பாதுகாத்திட வலியு றுத்தி தஞ்சை மாவட்ட திருவிழா கடை வியாபாரிகள் சங்கம் (சிஐடியு) சார்பில் கும்பகோணம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு மனுக் கொடுக்கும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு திருவிழா கடை வியாபாரிகள் சங்க மாவட்டச் செயலாளர் முத்துக்குமார் தலைமை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தை விளக்கி சிஐடியு மாவட்டப் பொருளாளர் எம் கண்ணன், கவுரவ தலைவர் செந்தில் குமார் பேசினர். சங்க தலைவர் கிருஷ்ண மூர்த்தி, செயலாளர் கண்ணன் துணைத் தலைவர் சரவணன் துணைச் செயலா ளர் ராஜேந்திரன், ஓய்வூதியர் சங்க மாவட்டப் பொறுப்பாளர் பழ.அன்பு மணி உள்பட திருவிழாக் கடை வியாபா ரிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.