தூத்துக்குடி, ஆக.19- முறைசாரா தொழிலாளர்களுக்கு தமிழக அரசு அறிவித்த நிவாரணம் இதுவரை கிடைக்கப் பெறாத தொழிலாளர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக் கையை வலியுறுத்தி தூத்துக்குடி, கோவில்பட்டி, திருச்செந்தூர் ஆகிய 3 மையங்களில் தொழிலாளர் அலுவலகங்களை முற்று கையிட்டு காத்திருப்பு போராட்டம் சிஐடியு மாவட்டக்குழு சார்பில் நடைபெற்றது. போராட்டத்தை ஒட்டி தூத்துக்குடி தொழிலாளர் அலுவலர் உடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தூத்துக்குடி மாவட் டத்தில் 967 முடி திருத்தும் தொழிலாளர்களுக்கு கொரோனா நிவாரணம் வழங்கும் பணி துவங்கி விட்டது. மீதம் உள்ள வர்களுக்கு பணம் செலுத்தப்படும். இதுவரை நிவாரணம் கிடைக்கப் பெறாத தொழிலாளர்கள் தங்கள் நலவாரிய அடை யாள அட்டை நகல், புதுப்பித்தல் தேதியை குறிப்பிடும் பக்கம், வங்கி பாஸ்புக் நகல் ஆகியவற்றை வியாழக்கிழமை மாலைக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இதில் தகுதியான வர்களுக்கு உடனடியாக நிவாரண நிதி உதவி வழங்கப்படும் என்று உடன்பாடு ஏற்பட்டதை ஒட்டி போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. தூத்துக்குடியில் நடைபெற்ற போராட்டத்தில் சிஐடியு மாவட்டத் தலைவர் இரா.பேச்சிமுத்து, செயலாளர் ஆர்.ரசல், மாவட்டக்குழு உறுப்பினர்கள் சொ.மாரியப்பன், ஆட்டோ முருகன், பெருமாள், மணவாளன், நாகராஜ், ஆறுமுகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கோவில்பட்டியில் நடைபெற்ற போராட்டத்திற்கு சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் கிருஷ்ணவேணி தலைமை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் மோகனதாஸ், மாவட்டக்குழு உறுப்பினர் தெய்வேந்திரன், கட்டுமான சங்க நகர தலைவர் மாரியப்பன், நகர செயலாளர் அந்தோணி செல்வம் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.