districts

img

நிவாரணம் வழங்கக் கோரி மைதீன் புகையிலை தொழிலாளர்கள் குடும்பத்துடன் குடியேறும் போராட்டம்

கும்பகோணம்,  ஏப்.12 - தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் மைதீன் புகையிலை நிறுவனம் நீண்ட நாளாக செயல்பட்டு வந்தது. அந்நிறுவனத்தில் சுமார் 250-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நீண்ட நாளாக ஒரே நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர். இந்நிலையில் மெல்லும் புகையிலையை அரசு தடை விதித்ததால், இந்நிறுவனம் கடந்த ஐந்து மாதங்களாக மூடப்பட்டுள்ளது. இந்நிலை யில் அந்நிறுவனத்தில் வேலை செய்த அத்தனை தொழிலாளர்களும் வேறு வழியின்றி, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே முடங்கிய நிலையில், உண வுக்கு வழியின்றி குடும்பத் தோடு கஷ்டப்பட்டு வருகின்ற னர்.  இது சம்பந்தமாக நிறுவ னத்திடம் ,வேலை இழந்த தொழிலாளர்களுக்கு உரிய  நிவாரணம் வழங்க கோரி யும், மெல்லும் புகையிலைக் கான தடையை நீக்கக் கோரி யும் அல்லது தமிழக அரசு வேலை இழந்த தொழிலா ளர்களுக்கு மாற்று வேலை வழங்கிடவும் கோரிக்கை வைத்து வந்தனர். ஆனால் தமிழக அரசும் நிர்வாகமும் எவ்வித நடவடிக்கை எடுக்காததால் கடந்த மார்ச் மாதம்  தொடர்ந்து இரண்டு நாட்களாக கும்பகோணம் மைதீன் புகையிலை தொழிற் சாலைக்கு முன்பு சிஐடியு மைதீன் தொழிலாளர் சங்க பொறுப்பாளர்கள் கணேசன், செந்தில், இளங்கோ ஆகியோர் தலைமையில் தொழிலாளர்கள் காத்திருப்பு  போராட்டத்தில் ஈடுபட்டனர். இச்செய்தி அறிந்து  கும்பகோணம் வட்டாட்சியர் சம்பந்தப்பட்ட தொழிலாளர் கள் மற்றும் மைதீன் நிறுவன  உரிமையாளரை அழைத்து  பேசி, ‘சுமூக தீர்வு ஏற்படுத்தப் படும்’ என எழுத்துப்பூர்வ மாக தெரிவித்ததால், காத்தி ருப்பு போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

ஆனால் இதுவரை அரசு  தரப்பிலோ நிர்வாக தரப்பி லோ எந்த பேச்சுவார்த்தை யும் நடத்தாமல், தொடர்ந்து தொழிலாளர்களை ஏமாற் றும் நோக்கத்தில் செயல் படுவதாக கூறி, கும்பகோ ணம் கோட்டாட்சியர் அலுவ லகம் முன்பு சுமார் 250 மைதீன் தொழிலாளர்கள் குடும்பங்களோடு குடியே றும் போராட்டத்தில் ஈடுபட்ட  னர். குடியேறும் போராட்டத் திற்கு சிஐடியு தஞ்சை மாவட்ட பொருளாளர் எம். கண்ணன் தலைமை வகித் தார். சிஐடியு மாவட்ட செயலா ளர் ஜெயபால், துணைத் தலைவர் சா.ஜீவபாரதி, சிபிஎம் மாநகர செயலாளர் செந்தில்குமார், ஊரக வளர்ச்சி துறை ஊழியர் சங்க  மாவட்ட செயலாளர் பி.ஜேசு தாஸ், சிஐடியு மைதீன் தொழி லாளர்கள் சங்க பிரதிநிதி கள் கணேசன், செந்தில், இளங்கோ மற்றும் தொழி லாளர்களின் குடும்பத்தோடு கோரிக்கை முழக்கம் எழுப்பி னர். இந்நிலையில் கோட்டாட் சியர், மைதீன் நிறுவன உரி மையாளரிடம் பேச்சு வார்த்தை நடத்தியதில், நிர்வாக தரப்பில் தொழிலா ளர்களின் கோரிக்கை குறித்து  முடிவு செய்ய ஒரு நாள் அவ காசம் கேட்டதன் அடிப்படை யில், வரும் வியாழக்கிழமை தீர்வு காணப்படும் என  கோட்டாட்சியர் தெரிவித்தார்.  இருப்பினும் கடைசி நிலையாக ஒருநாள் அவகா சத்திற்கு பிறகு கோரிக்கை நிறைவேறாவிட்டால், மைதீன் புகையிலை உரிமை யாளர் வீட்டின் முன்பு குடியே றும் போராட்டம் நடைபெறும் என சிஐடியு தலைவர்கள் மற்றும் தொழிலாளர்கள் அறிவித்துள்ளனர்.