ஆளுநர் பதவியிலிருந்து ஆர்.என்.ரவியை உடனடியாக நீக்கு
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியின், தன்னிச்சையான செயல் பாடுகளுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருப்ப தோடு, அவர் நிறுத்திவைத்த 10 மசோதாக்களுக்கும் உச்ச நீதி மன்றமே ஒப்புதல் அளித்துள்ள நிலையில், ஆளுநர் ரவியை பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவ ருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலி யுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக கட்சியின் மாநிலச் செய லாளர் பெ. சண்முகம் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றிய 10 மசோதாக்களுக்கு நீண்ட காலமாக ஒப்புதல் அளிக்காமல் காலம் கடத்தி வந்த தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியின் செயலுக்கு உச்ச நீதிமன்றம் தனது கடும் கண்டனத்தை தெரி வித்ததோடு, சிறப்புச் சட்டப் பிரிவு 142-ஐ பயன்படுத்தி அம்மசோதாக்களுக்கு ஒப்புத லையும் வழங்கியுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் இத்தகைய வர லாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை, இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் மாநில செயற்குழு வரவேற்கிறது. இந்த தீர்ப்பு கூட்டாட்சிக் கோட்பாட்டிற்கு வலு சேர்ப்பதாக அமைந்துள்ளது. தன்னிச்சைப் போக்கிற்கு முடிவுகட்டிய நீதிமன்றம் தமிழக ஆளுநராக ஆர்.என். ரவி பொறுப்பேற்ற நாளிலிருந்தே தமிழ் நாட்டின் நலன்களுக்கு எதிராக தொடர்ச்சி யாக பேசி வருவதையும், அரசியல் சாச னத்தின் மாண்புகளை மீறி தன்னிச்சை யாக செயல்படுவதையும் வாடிக்கையாகக் கொண்டிருந்தார். மேலும், தமிழக சட்டமன்றத்தின் கண்ணி யத்தைக் குலைக்கும் செயல்களில் ஈடுபட்ட தோடு, தமிழ்நாடு அரசு நிறைவேற்றும் மசோ தாக்களுக்கு அரசியல் உள்நோக்கத்தோடு ஒப்புதல் அளிக்காமலும் காலம் கடத்தி வந்தார். இந்நிலையில், தமிழ்நாடு அரசு ஆளுந ரின் நடவடிக்கையை கண்டித்தும், சட்டமன்றம் நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசா ரித்த உச்ச நீதிமன்றம், ஆளுநரின் நடவ டிக்கை சட்டவிரோதமானது, தன்னிச்சையா னது எனத் தனது கடும் கண்டனத்தை தெரி வித்ததோடு, அம்மசோதாக்களுக்கு ஒப்புதலை யும் வழங்கி உத்தரவிட்டுள்ளது. மாநில அரசு நிறைவேற்றும் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்குவதற்கான கால வரம்பை நிர்ணயித் தும் நாடு முழுவதும் ஆளுநர்கள் தன்னிச்சை யான போக்கிற்கு முடிவு கட்டியுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து மாநில உரிமையை பாதுகாப்பதற்கான சட்டப் போராட்டத்தை முன்னெடுத்த தமிழ்நாடு அர சையும் பாராட்டுகிறோம். மேலும் அரசியல் சாசனத்திற்கும், தமிழக நலன்களுக்கும் எதிராக தொடர்ச்சியாக செயல்பட்டு வரும் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியின் நடவ டிக்கைகளுக்கு கடுமையான கண்டனத்தை உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ள நிலையில், குடியரசு தலைவர் அவர்கள், தமிழக ஆளு நர் பொறுப்பிலிருந்து ஆர்.என். ரவியை உடன டியாக நீக்க வேண்டுமெனவும் இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) வலியுறுத்துகிறது. இவ்வாறு பெ.சண்முகம் வலியுறுத்தி யுள்ளார்.
கூட்டாட்சிக் கோட்பாடுகளை வலுப்படுத்தும் தீர்ப்பு!
அரசியல் தலைமைக்குழு வரவேற்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், கூட்டாட்சி கோட்பாட்டை வலுப்படுத்தும் தீர்ப்பு என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. “தமிழ்நாடு சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் மறுத்த ஆளுநரின் முடிவை ரத்து செய்த உச்ச நீதிமன்றத்தின் முக்கிய மான தீர்ப்பை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சி ஸ்ட்) அரசியல் தலைமைக் குழு வரவேற்கிறது. ஆளுநரால் நிறுத்தி வைக்கப்பட்ட பத்து மசோ தாக்களும் இப்போது சட்டமாகும் என்று நீதி மன்றம் அறிவித்துள்ளது. உச்ச நீதிமன்றம், ஆளுநரின் செயல்களை ‘சட்டவிரோதமானவை மற்றும் தன்னிச்சை யானவை’ என்று குறிப்பிட்டுள்ளது. சட்டமன்றத்தால் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்ட பின்னர், ஆளுநர் எவ்வளவு காலத்திற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்கான கால அட்டவணையை நீதிமன்றம் நிர்ணயித்துள்ளது. அனைத்து மாநிலங்களுக்கும் இந்த தீர்ப்பு பயனளிக்கும் அரசியலமைப்பில் உள்ள கூட்டாட்சி கோட்பாடு களை மீறிச் செயல்படும் எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களின் பல ஆளுநர்களின் செயல்களுக்கு எதிராக இந்த தீர்ப்பு வந்துள்ளதால், இது ஒரு வர லாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பாகும். மாநில சட்டமன்றங்களால் நிறைவேற்றப்பட்ட சட்டங்களுக்கு ஆளுநர்கள் ஒப்புதல் மறுத்துள்ள கேரளம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களுக்கும் இந்த தீர்ப்பு முன்னுதாரணமாக அமையும். நமது அரசியலமைப்பில் உள்ள கூட்டாட்சி கோட் பாடுகளை வலுப்படுத்தும் இந்த தீர்ப்பை சிபிஐ(எம்) வரவேற்கிறது. அதிகாரத்துவத்திற்கு எதிரான போராட்டத்தையும், மாநில அரசு களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான போராட் டத்தையும் உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு வலுப் படுத்தும்” என கூறப்பட்டுள்ளது.