தஞ்சாவூர், பிப்.5- தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே ஆதனூர் கிராமத்தில் சேத மடைந்த பாலத்தை சீரமைத்து தர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பேராவூரணியை அடுத்த ஆதனூ ரில் பல ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ள பகுதிக்கு செல்லும் பாதையில், இரு குளங்களை இணைக்கும் இடத்தில் பாலம் சேதமடைந்த நிலையில் போக்கு வரத்துக்கு பயனற்ற நிலையில் உள்ளது. விவசாயிகள் வயல்களுக்கு இடு பொருள்கள் கொண்டு செல்வதும், விளைவித்த பொருள்களை கொண்டு வருவதும் இந்த பாதையின் வழி யாகத்தான். தற்போது அறுவடை காலமாக உள்ளதால், அறுவடை இயந்திரங்க ளை கொண்டு செல்ல முடியாமல் விவசாயிகள் பலவாறு சிரமப்படுகின்ற னர். எனவே உடனடியாக பாலத்தை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து இப்பகுதியைச் சேர்ந்த ராஜா கூறுகையில், “ஆதனூரில் விவ சாய நிலங்களுக்கு செல்லும் இரு குளங் களை இணைக்கும் இடத்தில் கிராம மக்களின் நீண்ட போராட்டத்திற்கு பிறகு பாதை அமைக்கப்பட்டது. இந்த பால பாதையின் வழி விவசாயிகள் சென்று வந்து கொண்டிருந்தனர். தற்போது பாலம் சேதமடைந்து அருகே மண் அரிப்பு ஏற்பட்டுள்ளதால் நெல் வயல்களில் அறுவடை செய்து கொண்டு வரமுடியாமல் மிகுந்த சிரமமடைகின்றனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவே தஞ்சை ஆட்சியர் நேரில் பார்வையிட்டு உட னடியாக பாலத்தை சீரமைக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.