தஞ்சாவூர் ஆக.13- தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் கல்லூரியில் விளையாட்டு போட்டி நடைபெற்றது. கல்லூரி தாளாளர் எஸ்.டி.எஸ்.செல்வம் தலைமை வகித்து, போட்டி யை தொடங்கி வைத்தார். கல்லூரி முதல்வர் வீ.முத்து வேலு வரவேற்றார். மாணவர்கள் அணிவகுப்பு மற்றும் ஒலிம்பிக் தீபத்துடன் போட்டிகள் தொடங்கின. ஓட்டப்பந்த யம், குண்டு எறிதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் பட்டுக் கோட்டை காவல் துணை கண்காணிப்பாளர் எஸ்.கணேச மூர்த்தி, வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு களை வழங்கினார். நிறைவாக கல்லூரி துணை முதல்வர் அ.அமலோற்பவ செல்வி நன்றி கூறினார். கல்லூரி உடற்கல்வி இயக்குனர் ஜெ.ராஜமாணிக்கம், உடற்கல்வி ஆசிரியர்கள் கே.ராமமூர்த்தி, ஏ.ராஜா, டி.கார்த்திகேயன், எக்ஸ்.ரமேஷ் ஆகியோர் நடு வர்களாக பங்கேற்றனர். கணினியியல் துறைத் தலை வர் டி.வின்சென்ட் தொகுத்து வழங்கினார்.