தஞ்சாவூர், மார்ச் 26- தஞ்சாவூர் மருதுபாண்டியர் கல்வி நிறுவனங்களில் விளையாட்டு விழா நடைபெற்றது. விழாவுக்கு மருது பாண்டியர் கல்வி நிறுவனங்களின் தலைவர் கொ.மருது பாண்டியன் தலைமை வகித்தார். திருவாரூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் க.ராஜா சிறப்புரையாற்றினார். மருதுபாண்டியர் கல்லூரி முதல்வர் மா.விஜயா, மருதுபாண்டியர் கல்வியியல் கல்லூரி முதல்வர் ப.சுப்பிரமணியன், மருதுபாண்டியர் கல்லூரி துணை முதல்வர் ரா. தங்கராஜ், ஆராய்ச்சி புலத் தலைவர் கோ. அர்ச்சுனன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மருதுபாண்டியர் கல்லூரி தமிழ்த் துறைத் தலைவர் வீ.வெற்றிவேல், உதவிப் பேராசிரியர் கி.உஷா, கல்லூரி மேலாளர் இரா. கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர். முன்னதாக, மருதுபாண்டியர் கல்வியியல் கல்லூரி தமிழ்த் துறை உதவிப்பேராசிரியர் வ.நதியா வரவேற்றார். உடற்கல்வி இயக்குநர் எஸ்.பிரகாஷ் நன்றி கூறினார்.