tamilnadu

img

6 மாதமானது  காட்சிப் பொருளாக இருக்கும் நீர்த்தேக்கத் தொட்டி    

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், திருவோணம் ஒன்றி யம், பாதிரங்கோட்டை வடக்கு ஊராட்சி கா.உஞ்சியவிடுதி, கீழத்தெரு குடியிருப்பு பகுதியில், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை சார்பில், 2018-19 ஆம் ஆண்டு நிதியின் கீழ் ரூ 19.55 லட்சம் மதிப்பீட்டில், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, ஆழ்குழாய் கிணறு மற்றும் மின்மோட்டார் வசதியு டன் அமைக்கப்பட்டுள்ளது. பணி முடிந்து 6 மாதங்களைக் கடந்த நிலையில், இதுவரை மின் இணைப்பு வழங்கப்ப டாததால், குடிநீர் வழங்க முடியாத நிலையில் உள்ளது.  இதுகுறித்து இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் எழுத்தாளர் துரை.குணா கூறுகையில், “மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கும் பணி இரண்டு வருடங்க ளாக நடந்து வந்தது. தற்போது பணி முடிந்து 6 மாதங்களா கிறது. இன்னும் மின் இணைப்பு பெறாமல், பணி முழுமை யடையாமல் உள்ளது.  தற்சமயம் கோடை காலம் தொடங்கி விட்ட நிலையில், பொதுமக்கள் தண்ணீருக்காக அலையும் நிலை உள்ளது. ஊராட்சி ஒன்றிய நிர்வாகம், மின் வாரியம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் தெரிவித்தும் நடவ டிக்கை எடுக்கப்படவில்லை. உள்ளாட்சி அதிகாரிகளும், மின்வாரிய அதிகாரிகளும், தங்கள் மீது குறையில்லை என மற்றவர்களை சுட்டிக் காட்டுகின்றனர். இதேநிலை நீடித்தால் பொதுமக்களைத் திரட்டி, திருவோணம் அண்ணா சிலையில் இருந்து “துடைப்பம்” கையிலேந்தி ஊர்வலமாக சென்று சம்பந்தப்பட்ட அலுவலகங்களை முற்றுகையிடுவோம்” என்றனர்.  இதுகுறித்து திருவோணம் வட்டார வளர்ச்சி அலுவலர் முருகனிடம் கேட்டபோது,” இணைப்புக் கேட்டு மின்வாரிய அலுவலகத்தில் பணம் கட்டி விட்டோம். மின் வாரிய அலுவலகத்தில் போதிய ஒத்துழைப்பு இல்லை. பலமுறை கேட்டும் அலைக்கழிக்கின்றனர். விரைவில் குடிதண்ணீர் விநியோகம் செய்ய முயற்சி செய்கிறோம்” என்றார். ஊரணிபுரம் மின்வாரிய உதவிப் பொறியாளரிடம் இதுகுறித்து கேட்டபோது, “உடனடியாக மின்கம்பங்கள் நடப்பட்டு, இரு தினங்களில் மீட்டர் பெட்டி பொருத்தப்படும். அதிகபட்சமாக வரும் வெள்ளிக்கிழமைக்குள் பணி முடிக்கப்படும்” என்றார்.