tamilnadu

img

இடிந்து விழும் நிலையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி

நாமக்கல், ஜூன் 27- புதுச்சத்திரம் அருகே ஏளூர் அரசு சமுதாய நலக்கூடம் அருகில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனை சரி செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள் ளனர். நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் ஒன்றியம், ஏளூர் கிராமத்தில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங் கள் வசித்து வருகின்றனர்.  இங்கு மக்கள் விசைத்தறி தொழிலில் பிரதானமாக பணிபுரிந்து வருகின்றனர். இப் பகுதிக்கு கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு ஊராட்சி ஒன்றிய நிதியிலிருந்து ஒரு லட்சம் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கப்பட் டது. தற்போது, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் தூண்கள் நான்கு பகுதிகளிலும் மிகவும் சிதிலமடைந்து எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், அரசு சார்பில் கட்டப்பட்டுள்ள சமுதாய நலக் கூடமும் இதன் அருகில் உள்ளது.  இதனை  பொதுமக்கள்  அனைத்து விசேஷங்களுக்கும்  பயன்படுத்தும் இடமாக வும் இருப்பதால். பொதுமக்கள் மிகவும் அச்சத்துடன் வந்து செல்கின்றனர். இந்நிலையில் எந்த நேரத்திலும் மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டி இடிந்து விழும் நிலையில் இருப்பதை  ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் மற்றும் ஊராட்சி நிர்வாகத்திற்கு அப்பகுதி மக்கள் பலமுறை வலியுறுத்தியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர். ஆகவே, எவ்வித உயிர் சேதாரமும் ஏற்படாமல் இருக்க உடனடியாக இடித்து. புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைத்து தர வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.