தஞ்சாவூர், செப்.3- தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே ஆலத்தூர் அரசு மகளிர் உயர் நிலைப்பள்ளி வளாகத்தில் அபாய நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட் டியை அகற்றி விட்டு, புதிதாக அமைத்து தர வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோரிக்கை விடுக் கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள ஆலத்தூர் கிராமத்தில் அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. 800க்கும் மேற்பட்ட மாணவி கள் பயின்று வருகின்றனர். 50க்கும் மேற்பட்ட ஆசிரி யர்கள், அலுவலர்கள் பணியில் உள்ளனர். இங்குள்ள வளா கத்தில் கடந்த 36 ஆண்டுகளுக்கு முன்பு, 1983ஆம் ஆண்டு, சுமார் 1 லட்சம் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி குடிநீர் வடிகால் வாரியம் மூலம் அமைக்கப்பட்டது. இந்த தண்ணீர் தொட்டி மூலம் ஆலந்தூர் வடக்கு தெரு, நடுத்தெரு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலனடைந்து வந்தனர். இந்நிலையில், குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு, நீண்ட நாட்களான நிலையில் பழுதடைந்த நிலையில் குடிநீர் தொட்டி உள்ளது. மேலும் அடிக்கடி சிமெண்ட் காரைகள் பெயர்ந்து விழுகின்றன. வலுவிழந்த நிலையில் உள்ள நீர்த்தேக்க தொட்டி தண்ணீர் நிரப்பும் போது பாரம் தாங்காமல் இடிந்து விழும் அபாயம் உள்ளது. இதுகுறித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கிளைச் செயலாளர் எஸ்.வெற்றிச்செல்வன் கூறுகையில், “பள்ளி வளாகத்தில் உள்ள நீர்த்தேக்க தொட்டி அபாய நிலை யில் உள்ளது. இதனால் ஆசிரியர்கள், மாணவிகள் அச்சத்துட னேயே செல்ல வேண்டி உள்ளது. இதுபற்றி அதிகாரிகளி டம் புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதுகுறித்து, பலமுறை கிராம சபைக் கூட்டத்தில் தீர்மா னம் நிறைவேற்றப்பட்டது. மாவட்ட ஆட்சியருக்கும் புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது. அதிகாரிகள் கண்டுகொள்ளாத நிலை உள்ளது. எனவே அசம்பாவிதம் ஏதும் ஏற்படும் முன்பாக, சேதமடைந்த தொட்டியை இடித்து அகற்றி விட்டு புதிதாக மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைத்து தர வேண்டும்” என்றார்.