கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.
ஆடவர் ஒற்றையர்
ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள ஸ்பெயினின் ரபேல் நடால், தரவரிசையில் 20-வது இடத்தில் அர்ஜெண்டி னாவின் டிகோ ஸ்வார்ட்ஸ்மேனை எதிர்கொண்டார். தொடக்கம் முதலே பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் நடால் 6-4, 7-5, 6-2 என்ற செட் கணக்கில் ஸ்வார்ட்ஸ்மேனை புரட்டியெடுத்து அரை யிறுதிக்கு முன்னேறினார்.
மகளிர் ஒற்றையர்
மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் கனடாவின் பியான்கா, பெல்ஜியத்தின் மேர்டென்ஸை 3-6, 6-2, 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். மகளிர் பிரிவு அரையிறுதி ஆட்டங்கள் வெள்ளியன்று அதிகாலை வேளையிலும், ஆடவர் பிரிவு அரையிறுதி ஆட்டங்கள் சனியன்றும் நடைபெறுகின்றன.