டேவிஸ் கோப்பைக்கான டென்னிஸ் போட்டியில் லியாண்டர் பயஸ் பங்கேற்க உள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.
டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் இடையிலான ஆட்டம் அடுத்த மாதம் 29, 30 தேதிகளில் பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. இந்த போட்டியை பொதுவான இடத்துக்கு மாற்ற வேண்டும் என்ற இந்திய டென்னிஸ் சம்மேளனத்தின் கோரிக்கையை உலக டென்னிஸ் சங்கம் நிராகரித்து விட்டது. பாதுகாப்பு அச்சம் காரணமாக மகேஷ் பூபதி, ரோகன் போபண்ணா, ராம்குமார், சுமித் நாகல், சசிகுமார் முகுந்த் உள்ளிட்ட வீரர்கள் பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்து விட்டனர். இந்த நிலையில் ஓராண்டு இடைவெளிக்கு பிறகு டேவிஸ் கோப்பைக்கான டென்னிஸ் போட்டியில், லியாண்டர் பயஸ் பங்கேற்க உள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.