திருவனநதபுரம் ,கொரோனா முடக்கத்திலும் வெளிமாநில தொழிலாளர்களுக்கு உணவும் தங்குமிடம் அளித்தோடு வருவாய் ஈட்டவும் வழிவகுத்துள்ள கேரளா அரசுக்கு அவர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
கொரோனா பின்னணியில் பல்வேறு இடங்களில் குப்பை கழிவுகள் குவிந்து வருவதை அண்மையில் கேரளா முதல்வர் பினராயி விஜயன் சுட்டிக்காட்டினார்.அவற்றை அகற்றுவதுடன் மழைக்காலம் தொடங்டுவதற்கு முன்பு கால்வாய் ,குளங்களை சீரமைக்கும் பணியை கொரோனா கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து மேற்கொள்ளுமாறும் உள்ளாட்சி அமைப்புகளை கேட்டுக்கோண்டார்.இந்த பணிகளில் வெளிமாநில தொழிலாளர்களை பயன்படுத்தவும் அறிவுறுத்தினார்.அதன் விளைவு வெளிமாநில தொழிலாளர்களுக்கு பரவலான வேலை வாயப்பை அளித்துள்ளார்.
ஏற்கனவே உள்ளாட்சி அமைப்புகளில் செயல்பட்டு வரும் சமூக சமையலறை மூலம் வெளிமாநில தொழிலாளர்களுக்கு உணவு கிடைப்பதை உறுதி செய்துள்ளது கேரளா அரசு.
அதோடு தேவைக்கேற்ப உணவுப் பொருட்கள் அடங்கிய பைகளும் இலவசமாக வழங்கப்படுகின்றன.தற்போது வேலையும் வழங்கி வருவாய் ஈட்ட வழிவகுக்கப்பட்டுள்ளது.
திருச்சூர் மாவட்டம் வெங்கிடாங் பஞ்சாயத்தில் உள்ள 17 வார்டுகளில் 120 வெளி மாநில தொழிலாளர்கள் கால்வாய் சீரமைப்பு மற்றும் தூய்மை பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.இதுபோல் மாநிலம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுகின்றன. அவர்கள் கேரள அரசுக்கும் உள்ளாட்சி அமைப்புகளுக்கும் நன்றி தெரிவித்தனர்.