tamilnadu

img

மாநிலங்களவை தேர்தல்: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

சென்னை, ஜூலை 1- மாநிலங்களவை தேர்தலில் போட்டி யிடும் திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்  பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் காலியாகும், 6 மாநி லங்களவை உறுப்பினர் இடங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.  சட்டமன்றத்தில் கட்சிகள் பெற்றுள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில்,   அதி முக, திமுக கட்சிகளுக்கு தலா 3 உறுப்பி னர்கள் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு கள் உள்ளன. திமுக சார்பில் முன்னாள் கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞரும் சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறி ஞருமான பி. வில்சன், தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவை (தொமுச) பொதுச் செயலாளர் எம். சண்முகம் ஆகி யோர் வேட்பாளர்களாக போட்டியிடு வார்கள் என்று திமுக தலைவர் ஸ்டா லின் அறிவித்துள்ளார்.

ஏற்கனவே ஒப்புக்கொள்ளப்பட்ட படி ஒரு இடம் மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் ஒரு அறிக்கையில் தெரி வித்துள்ளார்.  இதனையடுத்து, திமுக வேட்பா ளர்கள் இருவரும் கோட்டைக்கு  வந்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப்பெற்றனர். அப்போது பொருளாளர் துரைமுருகன் உடனிருந்தார். பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய சண்முகம், தொழிலாளர்கள் மற்றும் தொழிற் சங்க உரிமைகளுக்காக கட்சித் தலைமையின் வழிக்காட்டுதல்படி மாநிலங்களவையில் குரல் கொடுப் பேன் என்று கூறினார். தமிழக மக்களின் உரிமைகளுக்காக நீதிமன்றத்தில் வாதாடி வெற்றி பெற்று வரும் என்மீது முழு நம்பிக்கை வைத்து மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை கட்சியின் தலைமை வழங்கியுள்ளது.  அந்த நம்பிக்கை மாநிலங்களவையில் நிச்ச யம் எதிரொலிக்கும். தமிழக  மக்களின் உரிமைகளை விட்டுக்கொடுக்காமல் போராடி வாதாடுவேன் என்று வில்சன் கூறினார்.