திருவனந்தபுரம்:
கேரளத்தில் காலியாகவிருக்கும் மூன்று மாநிலங்களவை இடங்களுக்கு, ஏப்ரல் 30 அன்று தேர்தல் நடைபெறும் என்று மத்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமையே (ஏப்.13) உடனடியாக வேட்புமனுத் தாக்கல் துவங்குவதாகவும் அது அறிவித்துள்ளது.கேரளத்தில் மாநிலங்களவை உறுப்பினர்கள்வயலார் ரவி (காங்கிரஸ்), கே.கே. ராகேஷ் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி), பி.வி. அப்துல்வஹாப் (முஸ்லிம் லீக்) ஆகியோரின் பதவிக்காலம்ஏப்ரல் 21 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த இடங்களுக்கு ஏப்ரல் 12-ஆம் தேதிதேர்தல் நடைபெறும் என கடந்த மாதமே தேர்தல் ஆணையம் அறிவிக்கை வெளியிட்டது. ஆனால்,திடீரென அந்த அறிவிக்கையைத் திரும்பப் பெற்றுக் கொண்டது. இது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதன் பின்னணியில், அரசியல் தலையீடு இருப்பதாக கேரள முதல்வர் பினராயி விஜயன்குற்றம் சாட்டினார். ‘அரசமைப்புச் சட்டத்தின் 324-ஆவது பிரிவின்படி தேர்தலை நடத்துவதற்கான அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்கு மட்டுமே உள்ளது. இதில் ஏன் அரசியல் தலையீடு? அதற்கு தேர்தல் ஆணையம் பணிந்தது ஏன்?என்று அவர் கேள்விகளை எழுப்பினார்.தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மாநில சட்டப்பேரவைச் செயலாளர் சார்பிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பிலும் கேரள உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்குகளும் தொடரப்பட்டன. இந்த வழக்கில், திங்கட்கிழமையன்று தீர்ப்பு வழங்கிய கேரள உயர் நீதிமன்றம், ‘கேரளத்தில் நடப்பு சட்டப் பேரவையின் பதவிக் காலம்முடிவதற்கு முன்பாகவே 3 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தலையும் நடத்த வேண்டும்’ என்றுஉத்தரவு பிறப்பித்தது. உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவதற்கு முன்பாகவே தேர்தல் நடத்துவதுதான் ஆணையத்தின் வேலை என்பதையும் சுட்டிக்காட்டியது.இதையடுத்தே தேர்தல் ஆணையம் தற்போதுதேர்தலை அறிவித்துள்ளது