india

img

கேரளாவில் மாநிலங்களவை தேர்தல் ஒத்திவைப்ப... நம்பகத்தன்மையை இழக்க வேண்டாம்.... பி.டி.டி ஆச்சார்யா.....

புதுதில்லி:
நடப்பு சட்டப்பேரவைக் காலத்தில்மாநிலங்களவை தேர்தல்களைத் தவிர்ப்பதற்கு மத்திய அரசும் தேர்தல்ஆணையமும் அளித்த காரணங்கள் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் விதிகளை மீறுவதாகும் என மக்களவை முன்னாள் பொதுச்செயலாளர் பி.டி.டி ஆச்சார்யா தெரிவித்துள்ளார்.  

மாநிலங்களவை உறுப்பினர் கள் ஓய்வு பெறும்போது, தற்போதுள்ள சட்டப்பேரவை புதிய உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று சட்டம் சந்தேகத்திற்கு இடமின்றி விளக்குகிறது என்று கூறியுள்ளார். சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கும்போது மாநிலங்களவைத் தேர்தல் ஒத்திவைக்கப்பட வேண்டும் என்று எங்கும் கூறவில்லை. ராஜிநாமா செய்த அல்லது இறந்த ஆறு மாதங்களுக்குள் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும். ஒருவருடத்திற்கும் குறைவாக பதவிக்காலம் இருந்தால், தேர்தல் களைத் தவிர்க்கலாம். உறுப்பினர்கள் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு ஓய்வுபெறும்போது, பதவிக்காலம் முடிவடைந்த மூன்று மாதங்களுக்குள் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும். ஓய்வுபெறும் நேரத்தில், தற்போதைய சட்டப்பேரவைதான் புதியஉறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். 1951 முதல் இதுவே நடைமுறையாக உள்ளது. மக்கள்பிரதிநிதித்துவ சட்டத்தில் பல திருத் தங்கள் செய்யப்பட்டிருந்தாலும், இது தொடர்பாக எந்த சந்தேகமும் விவாதமும் எழுந்ததில்லை.தற்போதைய சட்டப்பேரவை மக்களின் விருப்பத்தை வெளிப்படுத்த முடியாது என்ற வாதம் பொருத்தமற்றது. சட்ட அமைச்சகத்தின் கருத்தை செயல்படுத்த தேர்தல் ஆணையம் கடமைப்பட்டதல்ல. தேர்தல் ஆணையம் என்பது அரசியலமைப்பின் படி செயல்பட வேண்டிய ஒரு நிறுவனம். தேர்தல் ஆணையம் தனது நம்பகத்தன்மையை இழக்கக் கூடாது என்று பி.டி.டி ஆச்சார்யா கூறினார்.

தீர்ப்புக்காக வழக்கு ஒத்திவைப்பு
மத்திய அரசின் தலையீடு காரணமாக கேரளமாநிலங்களவை தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள் ளதாக தேர்தல் ஆணையம் கேரள உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. நீதிமன்றத்தை அணுகிய சட்டப்பேரவை செயலாளரும் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சர்மா வும் தேர்தல் ஆணையத்தின் முந்தையநிலையில் இருந்து அது விலகியதாக குற்றம் சாட்டினர். தேர்தல் ஆணையம் இதுபோன்ற விளையாட்டுகளை நடத்துவது பொருத்தமானதல்ல என்றும் ஆணையத்தின் நிலைப்பாடு சட்டபூர்வமானது அல்ல என்றும் மே 2 க்கு முன்னர் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் மனுதாரர்கள் வாதிட்டனர். வெள்ளியன்று (ஏப்.9) நீதிபதி பி.வி.ஆஷா இந்தமனுக்கைளை பரிசீலித்தார். தீர்ப்புக்காக வழக்கு  ஒத்திவைக்கப்பட்டது.