tamilnadu

img

ஜெ. மரணம்: சிறப்பு குழு அமைக்க பிரதாப்ரெட்டி கோரிக்கை

சென்னை, ஆக.19- ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையில் சிறப்பு குழு அமைக்க வேண்டும் என்று அப்பல்லோ தலைவர் பிரதாப் ரெட்டி கூறியுள்ளார். அப்பல்லோ மருத்துவமனை சார்பில்  மருத்துவ மாணவர்களுக்காக தொகுக்கப்பட்ட சிறப்பு நூல்களின் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. விழாவில் பங்கேற்ற அப்பல்லோ தலைவர் பிரதாப் ரெட்டி செய்தியாளர்களிடம் கூறுகையில், “மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆருக்கு எவ்வாறு உயர்தர சிகிச்சையை நாங்கள் அளித்தோமோ, அதே போன்று ஜெயலலிதாவுக்கும் உலகத்தரத்திலான சிகிச்சையை அப்பல்லோ மருத்துவமனை அளித்தது” என்றார்.

பிரசித்தி பெற்ற உள்நாட்டு மருத்து வர்கள் மற்றும் வெளிநாட்டு மருத்து வர்கள் மூலமாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதை நானே நேரடி யாக கண்காணித்தேன் என்றும் அவர் கூறினார். ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை ஆணை யத்தில் நாங்கள் தெரிவித்த மருத்துவ ரீதியான கருத்துக்கள் சரிவர மொழி யாக்கம் செய்யப்படவில்லை. எனவே  மருத்துவ கலைச் சொற்கள் அறிந்தவர்கள், நிபுணர்கள் ஆகியோரைக் கொண்ட சிறப்புக் குழு அமைக்க வேண்டும் என  நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். ஜெய லலிதா மரணம் தொடர்பாக மீண்டும் விசா ரணை தொடங்கினால் முழு ஒத்துழைப்பு அளிக்க தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.