சென்னை, செப்.3- பொள்ளாச்சியைச் சேர்ந்த 16 வயது சிறுமி பாலியல் வழக்கில் சிக்கிய 3 பேரின் ஜாமீன் மனுக் களை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பொள்ளாச்சியை சேர்ந்த 16 வயது சிறுமி, மாஜிஸ்திரேட்டு நீதி மன்றத்தில் கடந்த ஜூலை மாதம் வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- என்னை காதலித்த அமா னுல்லா கடந்த ஜூலை 4 ஆம் தேதி மோட்டார் சைக்கிளில் ஏறச் சொல்லி ஊத்துக்குளி என்.வி.எம். நகருக்கு அழைத்துச் சென்றார். அங்கு காலியிடத்தில் நின்று கொண்டிருந்த பேருந்தில் கட்டா யப்படுத்தி தவறாக நடந்து கொண்டார். அப்போது அங்கு வந்த அவரது நண்பர் பகவதியும் என்னை மிரட்டி பாலியல் தொல்லை தந்தார். பின்னர் என்னை வீட்டிற்கு அருகே இறக்கிவிட்டுச் சென்ற னர். அப்போது அங்கிருந்த பிரபு என்பவர், என்னை வலுக்கட்டாய மாக, அறையில் வைத்து மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்தார். மறுநாள் காலையில் என்னை சீனிவாசபுரம் பாலம் அருகே அவர் இறக்கி விட்டுச் சென்றார். அப்போது எங்கள் பகுதி யைச் சேர்ந்த முகமது அலி என்ப வர் என்னை பார்த்து எங்கு சென்று வருகிறாய்? என்று விசாரித்தார். அவரிடம் நடந்த விஷயத்தை சொன்னேன். என் அப்பா குடி போதையில் இருப்பார், என்னை பார்த்தால் கண்டிப்பாக அடித்துக் கொன்று விடுவார் என்றேன். உடனே அவர் சந்தை பேட்டையில் உள்ள அவரது நண்பர் செந்தில்குமாரது வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அங்கு செந்தில்குமாரும் முக மது அலியும் தவறாக நடந்து கொண்டனர்.
பின்னர் கொடைக்கானலுக்கு அழைத்துச் செல்வதாக கூறி காரில் ஏற்றினர். கார் ஊத்துக்குளி அருகே வந்தபோது, நான் சத்தம் போட்டு கத்தியதால், என்னை அங்கு இறக்கிவிட்டுச் சென்று விட்டனர். இரவு முழுவதும் எங்கு போனாய் என்று என் சித்தி விசாரித்தபோது, இதை யெல்லாம் அவரிடம் கூறி னேன். இதையடுத்து பொள் ளாச்சி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் செய்தோம். என்னை முதலில் சினிமா படப்பிடிப்புக்கு அழைத்துச் செல்வதாக கூறி, அருண் என்ப வர் கூட்டிச் சென்றார். அவர் தான் என்னிடம் ஆசை வார்த்தை கூறி முதலில் தகாத முறையில் நடந்தார். பின்னர். முகமது ரபீக், அவரது நண்பர் இர்ஷாத்பாஷா, சையது முகமது ஆகியோரும் படப்பிடிப்புக்கு அழைத்துச் செல்வதாக கூறி ஆசை வார்த்தை கூறி தவறாக நடந்த னர். இதையடுத்து பாட்டி வீட்டில் நான் இருந்த போது, முகமது என்ற சேட்டுவும் பாலியல் வன்புணர்ச்சி செய்தார். இவ்வாறு அந்த சிறுமி வாக்குமூலம் அளித்தார்.
சிறுமியை பாலியல் கொடுமை செய்தவர்களில் பலரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதில் அருண் உள்பட 3 பேர் ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக் கள் நீதிபதி ஜி.கே.இளந்திரை யன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் ஆஜரான குற்றவியல் வழக்கறிஞர் பிரபாவதி, ‘மனு தாரர்கள் சிறுமியை மிரட்டி பாலி யல் பலாத்காரம் செய்துள்ள னர். இவர்களை ஜாமீனில் விடு வித்தால், வழக்கு விசாரணை பாதிக்கும். இவர்களது செயலை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது’ என்று வாதிட்டார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, 3 பேர் ஜாமீன் மனுக்களை யும் தள்ளுபடி செய்து உத்தர விட்டார்.