tamilnadu

img

ப.சிதம்பரம் ஜாமீன் மனு தள்ளுபடி

புதுதில்லி,நவ.15- ஐஎன்எக்ஸ் மீடியா முறை கேடு தொடர்பாக அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனுவை தில்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ஐஎன்எக்ஸ் மீடியா முறை கேடு  தொடர்பாக கடந்த ஆகஸ்ட் 21 அன்று  சிபிஐயும்  அதைத் தொடர்ந்து அக்டோபர் 16 அன்று அமலாக்கத்துறையும் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்ப ரத்தை கைது செய்தது. இந்த வழக்குகளில் ஜாமீன் வழங்கக் கோரி சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை தில்லி உயர்நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.  சிதம்பரத்தின் மீதான குற்றச் சாட்டுகள் தீவிரமானவை என்றும், வழக்கில் சிதம்பரம் முக்கிய பங் காற்றியுள்ளார் என்றும் நீதிபதி கருத்து தெரிவித்தார். ஏற்கெ னவே சிபிஐ வழக்கில் ஜாமீன்  கிடைத்தது. ஆனால் அமலாக் கத்துறை வழக்கில் ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது.