tamilnadu

img

பணியின் பொழுது விபத்து அரசின் பாராமுகம்

சென்னையில் ஏற்பட்ட தீவிபத்து 

இந்தியன் 2 படப்பிடிப்பின்பொழுது ஏற்பட்ட விபத்தில் கிரேன் விழுந்து பணியில் ஈடுபட்டு இருந்த தொழி லாளர்கள் மூன்று  தொழிலாளர்கள் இறந்த னர். 10 பேர் காயமுற்றனர்.இது குறித்து நடிகர் கமல்ஹாசன் விசாரிக்கப்டுகின் றார். இந்த விபத்து தமிழகம் முழுவதும் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பணியின் பொழுது விபத்து நடந்தால் உடனடியாக அதற்கு உரிய நடவடிக்கை எடுத்திட தமிழக அரசு முனைப்பு காட்டி யுள்ளது போன்று தமிழகத்தில் ஏற்பட்ட இதர தொழிற்சாலை விபத்துக்களுக்கும் காட்டி இருந்தால்வரவேற்கலாம். பணியின்பொழுது விபத்து நடக்கக் கூடாது. பாதுகாப்பு முக்கியமாகும். அதற்கான ஆயத்தப் பணிகளை தமிழக அரசின் தொழிற்சாலை பாதுகாப்புக்குழு ஏற்பாடு செய்யவேண்டும்.

நடப்பதற்கு முன்னரே தடுக்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம் ஆகும். தொழிற்சாலைகள் பாதுகாப்புக்கு பொறுப்புக்குண்டான இயக்குநர், தொழிற் சாலை பாதுகாப்பு மற்றும் சுகாதாரம், தமிழ்நாடு அவர்கள், விபத்து இல்லா தமிழகம் என்று அறிவித்து ஒரு மாதம் கூட ஆகவில்லை. அதற்குள் பல விபத்துக்கள் தமிழகத்தின் தொழிற்சாலைகளில் ஏற் பட்டுள்ளதற்கு எந்த விளக்கமும் அரசி டம் இல்லை. சென்னை மெட்ரோ ரயிலை இயக்குவதற்கு பயிற்சி பெற்ற ஊழியர்க ளை வெளியேற்றி விட்டு பயிற்சி பெறாத ஒப்பந்தத் தொழிலாளர்களை வைத்து இயக்குவதற்கு ஐஏஎஸ் அதிகாரியே செயல் படுகின்றார். தொழிற்சாலை இயக்குநரால் ஐஏஎஸ் அதிகாரி செய்வதை தடுக்கமுடி யாது. காரணம் தொழிற்சாலை இயக்குநர் ஆக உள்ளவர்  ஐஏஎஸ் அதிகாரி இல்லை. இதை தமிழக அரசு வெறுமனே பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றது; எந்த நடவ டிக்கையும் எடுக்கவில்லை.

பிப். 29 அன்று சென்னைக்கு மிக அருகில் உள்ள மாதவரம் புறவழிச்சாலை யில் அமைந்திருந்த ஒரு வேதியில் பொருட் கள் சேமிப்புக் கிடங்கில் ஏற்பட்ட தீ. இரண்டு நாள் எரிந்து கொண்டிருந்தது. 150 கோடி ரூபாய்க்கு மேல் சேதாரம். 150 க்கும் மேற்பட்ட தீயணைப்பு நிறுவனங் கள் செயலபட்டன. நல்ல வேளையாக மனித உயிர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்பட வில்லை. ஆனால் எரிந்த ரசாயனப்பொ ருட்கள் அனைத்தும் புற்றுநோயை  உருவாக்கும்  ரசாயனங்கள். அதன் புகை வெளிவந்தது. சென்னை பகுதியில்  வசிப்ப வர்கள் அனைவரும் அப்புகையை சுவாசித்துள்ளனர். 

அந்தக்குடோன் அமையும்பொழுது மக்கள் அப்பகுதியில் குடியிருக்கவில்லை. நகரம் விரிவடையும்பொழுது தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.  அதேபோன்று தான் காமராஜர் துறை முகத்தில் இரு கப்பல்கள் மோதிக்கொண்டு கடலையே நாசமாக்கியது. அதே காமரா ஜர் துறைமுகத்தில் செட்டிநாடு கோல் டெர்மினலில் (இந்தியன் -2 படப்பிடிப்பில் ஏற்பட்ட அதே மாதிரி விபத்து) கிரேன் பூம் உடைந்து விழுந்து தொழிலாளி இறந்து போனார். அதை சாதாரண வழக்காக காவல்துறையில் பதிவு செய்வதற்கு உயர்ந்த இடத்திலிருந்து சிபாரிசுகள் வரு கின்றன. அலட்சியத்தினால் ஏற்பட்ட விபத்து என்று வழக்கு பதியப்படுகின்றது. திருவள்ளூர் மாவட்டம் ஆரணிப்பகுதியில் ஷீன்லாக் பெயின்ட் கம்பெனியில் ரசாயன டேங்கில் வெல்டிங் செய்த தொழிலாளிகள் இருவர் அந்த டேங்க் வெடித்து அந்த இடத்திலேயே இறந்தனர். தொழிற்சாலை பாதுகாப்பை உறுதிப்படுத்தும் இயக்குநர் அலுவலகங்கள் விபத்து நடந்தால் தலையிடும் நிலையிலேயே உள்ளன. அவற்றுக்கு விபத்தை தடுக்கும் ஏற்பாடு கிடையாது. அதுமட்டுமல்ல அந்த அதி காரிகள் தொழிற்சாலைகளை ஆய்வு செய்வது கூட அரசு அனுமதித்தால் மட்டுமே மேற்கொள்ளமுடியும் மத்திய அரசு என்று சட்டத்திருத்தம் கொண்டு வந்ததை தமிழக அரசு ஏற்றுக்கொண்டு விட்டது. இதனால் கொஞ்சநஞ்ச பயம் கூட தொழிற்சாலைகளுக்கும் நிறுவனங்க ளுக்கும் இல்லாமல் போய்விட்டது. இதனால் விபத்தினால் பாதிக்கப்படும் குடும் பங்கள் பரிதவிக்கும் நிலையே உள்ளது. அதோடு பொது மக்களும் பாதிக்கப்படு கின்றனர். விபத்துக்கள் ஏற்படாத நடவ டிக்கைகளே அனைவரின் எதிர்பார்ப்பு. அதனை செய்ய தமிழகஅரசு நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தையே இந்தியன் -2 படப்பிடிப்பு உணர்த்து கின்றது.  

-கே.விஜயன்