districts

img

திண்டுக்கல் – துணிக்கடையில் திடீர் தீ விபத்து

திண்டுக்கல் அருகே துணிக்கடையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகின.  

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே சந்திரசேகர் என்பவருக்கு சொந்தமான டெக்ஸ்டைல்ஸ் மற்றும் பர்னிச்சர் என்ற கடை உள்ளது. இன்று  அதிகாலை திடீரென தீப்பற்றி கொளுந்து விட்டு எரிந்தது.  தகவல் அறிந்து வந்த நத்தம் தீயணைப்புத்துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.  

இந்த தீ விபத்தில் சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகின.  அதனைதொடர்ந்து சாணார்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.