சென்னையில் தனியார் வங்கி அமைந்துள்ள 5 மாடி கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
சென்னை அண்ணாநகர் 5ஆவது அவென்யூ சரவணபவன் ஓட்டல் அருகே உள்ள தனியார் வங்கி மற்றும் அலுவலகம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து தகவலறிந்து வந்த 10 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளது. மேலும் தீப்பிடித்த கட்டிடத்தில் சிக்கிய ஐ.டி. நிறுவன ஊழியர்கள் 6 பேரை மீட்டனர். அதனைதொடர்ந்து தீயை அணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கீழ் தளத்தில் இருக்கக்கூடிய வங்கியில் இருந்துதான் தீ பற்றியதாகவும், தொடர்ந்து அடுத்தடுத்த தளங்களுக்கு வேகமாக மின்கசிவு மூலமாக தீ பரவியிருக்கும் என்று தீயணைப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர்.