tamilnadu

img

விநாயகர் சிலைகளைக் கரைக்கும் போது நிகழ்ந்த சோகம்

நாடு முழுவதும் 40 பேர் பலி

மும்பை, செப்.14- நாட்டின் பல்வேறு நீர்நிலைகளில் விநாயகர் சிலைகளை கரைக்கும் போது ஏற்பட்ட அசம்பாவிதங்களில் 40 பேர் மூழ்கி உயிரிழந்தனர்.  மிகப்பெரிய விபத்து போபாலில் படகு கவிழ்ந்ததில் ஏற்பட்டது. இச்சம்பவத்தில் மட்டும் 11 பேர் படகு கவிழ்ந்து நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.  மும்பை, புனே,நாக்பூர், நாசிக், ரத்னகிரி உள்ளிட்ட மகாராஷ்டிரா வின் 11 மாவட்டங்களில் 23 பேர் விநாய கர் சிலைகளைக் கரைக்கும்போது உயிரி ழந்தனர். தில்லியில் இரண்டு பெண்கள் உள்பட நான்குபேர் விநாயகர் சிலை யைக் கரைத்துவிட்டு ஆற்றில் குளிக்கும் போது மூழ்கி விட்டனர். மொராதாபாதி லும் இருவர் நீரில் மூழ்கி இறந்தனர். தடை செய்யப்பட்ட இடங்களில் நீரில் விநாயகர் சிலைகளைக் கரைக்க சென்ற தால்தான் உயிர்ச்சேதம் அதிகரித்திருப்ப தாக காவல்துறையினர் கூறுகின்றனர். அரசு அனுமதித்த இடத்தில் மிகுந்த கவனமாக விநாயகர் சிலைகளைக் கரைத்திருந்தால் இந்த விபரீதத்தை தவிர்த்திருக்கலாம் என்றும் காவல்துறை யினர் எச்சரிக்கின்றனர்.