tamilnadu

மாநில திட்டக்குழு கூட்டம்: புதுச்சேரி முதல்வர், அமைச்சர்கள் வெளிநடப்பு

புதுச்சேர, ஜூலை 6- துணைநிலை ஆளுநர்  தலைமையில் நடைபெற்ற  மாநில திட்டக்குழுகூட்டத் தில் இருந்து புதுச்சேரி முதல்வர் அமைச்சர்கள் வெளிநடப்பு செய்தனர். புதுச்சேரி மாநில 2019 -  2020ஆம் ஆண்டிற்கான   திடடக்குழுகூட்டம் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தலைமையில் தலைமை செயலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் முதல்வர் நாரா யணசாமி, அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணராவ், கந்தசாமி, கம லக்கண்ணன், ஷாஜகான், மாநிலங்களவை உறுப்பினர் கோகுலகிருஷ்ணன், மக்க ளவை உறுப்பினர் வைத்திய லிங்கம், தலைமை செயலா ளர், அரசு செயலாளர்கள் துறை இயக்குநர்கள் உள் ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டம் துவங்கியவுடன் மாநிலங்களவை உறுப்பி னர்கள், சட்டமன்ற எதிர் கட்சித் தலைவர்கள் ஏன்  கூட்டத்தில் பங்கேற்க வில்லை எனக் கேள்வி எழுப்  பினர். அதற்கு ஆளுநர் எந்த வித பதிலும் கூறவில்லை எனத் தெரிகிறது. உடனே கோகுலகிருஷ்ணன் கூட்  டத்தில் இருந்து வெளி நடப்பு செய்தார். மக்க ளவை உறுப்பினர் வைத்திய லிங்கம் எழுப்பிய கேள்  விக்கும் உரிய பதிலளிக்க வில்லை. இதையடுத்து முதல்வர் நாராயணசாமி தலைமையில் அமைச்சர்கள் அனைவரும் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.