tamilnadu

img

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் தேதி அறிவிப்பு

நடிகர் சங்கத்திற்கான தேர்தல் தேதியும், தேர்தல் நடைபெறும் இடமும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் சென்னையில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் அவசர செயற்குழு கூட்டம் நடந்த போது நடிகர் சங்க தேர்தலை ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் அவர்களின் தலைமையில் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்கான ஒப்புதலையும் நடிகர் சங்கம் பெற்றது.
இந்த நிலையில் தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் ஜூன் 23-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நடிகர் சங்க தேர்தல் சென்னை அடையாறு எம்ஜிஆர்-ஜானகி கல்லூரியில் நடைபெறவிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் சங்க தேர்தலில் தற்போது பதவியில் இருக்கும் நிர்வாகிகளான நாசர், விஷால், கார்த்தி உள்பட அனைவரும் மீண்டும் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.