சென்னை, ஏப்.2- கொரோனவை கட்டுப்படுத்த இரவு பகலாக போராடி வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினரை பாராட்டி இசையமைப்பா ளர் ஏ.ஆர்.ரகுமான் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது: “இந்தியா முழுவதிலும் உள்ள மருத்துவ மனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலி யர்கள் மற்றும் அனைத்து ஊழியர்களுக்கும், அவர்களின் துணிச்சலுக்கும் தன்னலமற்ற தன்மைக்கும் நன்றி தெரிவிப்பதற்கே இந்த பதிவு. இந்த மிக மோசமான தொற்றுநோயை சமாளிக்க அவர்கள் எவ்வளவு தயாராக இருக்கி றார்கள் என்பதைப் பார்க்கும் போது மன நிறைவை தருகிறது.
நம்மைக் காப்பாற்ற அவர்கள் தங்கள் உயி ரைப் பணயம் வைத்துள்ளனர். நமது வேறுபாடு களை மறந்து உலகை தலைகீழாக மாற்றிய இந்த கண்ணுக்கு தெரியாத எதிரிக்கு எதிராக ஒன்று படுவதற்கான நேரம் இது. மனிதநேயம் மற்றும் ஆன்மீகத்தின் அழகை செயலில் கொண்டுவரு வதற்கான நேரம் இது. அருகில் இருப்பவர்கள், மூத்த குடிமக்கள், புலம்பெயரும் தொழிலாளர்க ளுக்கு மற்றும் ஏழைகளுக்கு உதவுங்கள்.
கடவுள் உங்கள் இதயத்திற்குள் இருக்கி றார். மிக புனிதமான ஆலயம் அதுதான். மத வழி பாட்டு தலங்களில் கூடி குழப்பத்தை ஏற்படுத்தும் நேரம் இதுவல்ல. அரசாங்கத்தின் ஆலோசனை யைக் கேளுங்கள். சில வாரங்களுக்கு சுய தனிமையை கடைபிடித்தால், இன்னும் பல ஆண்டுகள் நிம்மதியாக வாழலாம். வைரஸை பரப்பி சக மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்காதீர்கள். பொய்யான வதந்திகளை பரப்புவதற்கும், பீதியை ஏற்படுத்துவதற்கும் இது நேரம் அல்ல. தயவுசெய்து சிந்தனையுடன் செயல்படுங்கள், பலரது வாழ்க்கை நம் கையில் உள்ளது. “ இவ்வாறு அவர் கூறியுள்ளார்.