லாஸ் ஏஞ்சல்ஸ்
கனடாவைச் சேர்ந்த பிரபல ஹாலிவுட் நடிகர் நிக் கோர்டரோ கடந்த மாதம் 31-ஆம் தேதி மூச்சுத் திணறல் காரணமாக மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள
மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவ பரிசோதனையில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யவே தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
கொரோனா வைரஸின் தீவிரத்தால் கோர்டரவின் வலது காலில் ரத்தம் உறைய ஆரம்பித்தது. தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட பொழுதிலும் விரல்களுக்கு ரத்தம் உடலுக்குள் ரத்தக் கசிவு ஏற்பட்டு, உள் உறுப்புகள் செயல் இழக்கும் நிலைமை உருவானது. வலது காலை உடனடியாக துண்டித்தால் மட்டுமே கோர்டரோவை காப்பாற்ற முடியும் என குடும்பத்தினரிடம் மருத்துவர்கள் வலியுறுத்த, குடும்பத்தினரின் அனுமதியின் பேரில் கோர்டரோவின் வலது காலை மருத்துவர்கள் துண்டித்தனர்.
தற்போது நிக் கோர்டரோவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு நலமுடன் இருப்பதாக அவரது மனைவி அமண்டா கூட்ஸ் இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்.