தில்லி
உத்தரபிரதேச மாநிலத்தின் அயோத்தி நகராட்சி பகுதியில் சர்ச்சைக்கு உரிய 2.75 ஏக்கர் நிலத்தை உச்சநீதிமன்றம் சமீபத்தில் இந்துக்களுக்கு வழங்குவதாக தீர்ப்பு வழங்கியது. பல ஆண்டுகளாக நாட்டின் மிக முக்கியமான சம்பவமாக இருந்த இந்த அயோத்தி வழக்கை மையமாக கொண்டு திரைப்படம் ஒன்று தயாராகுகிறது. இந்த திரைப்படத்தின் திரைக்கதையை பாகுபலி இயக்குநர் ராஜமவுலியின் தந்தை விஜேயந்திர பிரசாத் எழுதி உள்ளார். இந்தியில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் கங்கனா ரனாவத் தயாரிக்கிறார். கங்கனா ரனாவத் தற்போது ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறான 'தலைவி' படத்தில் நடித்து வருகிறார்.