tamilnadu

img

குறைந்த செலவில் எடுக்கும் சினிமாவுக்கு ரூ. 7 லட்சம் மானியம்

சென்னை, நவ. 1-  குறைந்த செலவில் எடுத்த தமிழ் திரைப்படங்களுக்கு ரூ.7 லட்சம் மானியம்  வழங்கப்படும் என தமிழகம் அரசு அறி வித்துள்ளது.  இதுதொடர்பாக தமிழக அரசு வெளி யிட்டுள்ள அறிவிப்பில், 2015, 2016, 2017 ஆம்  ஆண்டுகளில் குறைந்த செலவில்  எடுக்கப்பட்ட தமிழ் திரைப்படங்கள் குறித்த தகவலை நவம்பர் 29 ஆம் தேதிக்குள் ரூ.100 வங்கிவரைவோலையாக எடுத்து அனுப்பி வைக்க வேண்டும். அவற்றினை அரசு ஆராய்ந்து தேர்ந்தெடுக்கப்படும் தமிழ் திரைப்படங்களுக்கு ரூ.7 லட்சம் மானியம் வழங்கப்படும் என தமிழக அரசு  தெரிவித்துள்ளது.