சென்னை, செப்.21- சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த வி.கே. தஹில் ரமணி மேகாலயா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இடமாற்றம் செய்யப்பட்டார். உச்சநீதிமன்ற கொலீஜியத்தின் இந்த பரிந்துரையை மறு பரி சீலனை செய்யக் கோரி அவர் விடுத்த கோரிக்கை நிரா கரிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தலைமை நீதிபதி வி.கே. தஹில் ரமணி பதவி விலகல் கடிதம் அளித்தார். ஆனால் அவரது ராஜினாமா கடிதம் மீது குடியரசுத் தலைவர் முடிவு குறித்து எந்த உறுதியான தகவலும் வெளி யாகவில்லை. அதேசமயம் தலைமை நீதிபதி தலைமை யிலான அமர்வில் விசாரிக்கப்பட வேண்டிய வழக்குகளின் விசாரணை நடத்தப்படவில்லை. கொலீஜியத்தின் பரிந் துரை மற்றும் தனது பதவி விலகல் கடிதத்தின் மீது குடி யரசுத் தலைவர் முடிவு எடுக்கும் வரை வழக்குகளை விசா ரிப்பதில் இருந்தும், சென்னை உயர்நீதிமன்ற நிர்வாக நட வடிக்கையில் இருந்தும் தலைமை நீதிபதி தஹில் ரமணி விலகியிருந்தார்.
வினீத் கோத்தாரி
இந்நிலையில், தலைமை நீதிபதி தஹில் ரமணியின் ராஜினாமாவை குடியரசுத் தலைவர் ஏற்றுக்கொண்டுள் ளார். தலைமை நீதிபதியின் ராஜினாமா ஏற்றுக் கொள்ளப் பட்டுவிட்டதாக மத்திய சட்ட அமைச்சகம் அறிவித்துள்ளது. மேலும் மூத்த நீதிபதி வினீத் கோத்தாரி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பு வகிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.