சென்னை,ஜூலை 31- குழந்தைகள் மற்றும் சிறார்கள் மீதான பாலியல் தாக்குதல் அதிகரித்து வருவதைக்கண்ட உச்ச நீதிமன்றம் இதுகுறித்து தாமாக முன் வந்து வழக்குப் பதிவு செய்தது. இது தொடர்பான விசாரணையின் போது, 100க்கும் அதிகமான போக்சோ வழக்கு கள் பதிவான மாவட்டங் களில் சிறப்பு நீதிமன்றங் களை அமைக்க உத்தரவிட்டது. இந்த நீதிமன்றங் களை 60 நாட்களுக்குள் அமைக்க வேண்டும் என்று உத்தர விட்டுள்ள உச்ச நீதிமன்றம், இதற்கான செல வினங்களை மத்திய அரசே ஏற்கவேண்டும் என்றும் கூறியது. இந்நிலையில் போக்சோ வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்க கோரிக்கை வந் துள்ளதாகவும், அதற்காக வாதாடுவதற்கு சிறப்பு வழக்கறிஞர்கள் நியமிக்கப்படுவார்கள் எனவும் தமி ழக சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்துள்ளார்.