சென்னை:
சிறுவர்-சிறுமிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்துபவர்களை கடுமையாக தண்டிக்கும் வகையில் 2012 ஆம் ஆண்டு போக்சோ சட்டம் கொண்டுவரப்பட்டது. சிறுவர்-சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்வது தொடர்பாக பதியப்பட்ட வழக்குகள் 100 எண்ணிகை வரை இருந்தால் அந்த மாவட்டங்களில் சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனடிப்படையில் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில், அமர்வு நீதிமன்ற கட்டிடத்தில் சிறுவர்-சிறுமிகள் பாலியல் கொடுமை தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் போக்சோ சிறப்பு நீதிமன்றம் தொடங்கப்பட்டுள்ளது. சிறப்பு நீதிமன்றத்தை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதி வினீத் கோத்தாரி தொடங்கி வைத்தார். சென்னையில் நிலுவையில் உள்ள 200-க்கும் மேற்பட்ட போக்சோ வழக்குகளை, கால வரம்பை நிர்ணயித்து, அந்த வழக்குகளை எல்லாம் விரைவாக விசாரித்து முடிவுக்கு கொண்டு வர வேண்டும். வழக்குகளை விரைவாக முடிவுக்கு கொண்டு வர இருதரப்பினரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்று நீதிபதி கூறினார்.