பக்தர்கள் அதிகளவில் கூடலாம் என்பதால் கொரோனா பரவா மல் தடுப்பதற்காக ஜூன் 23 அன்று நடைபெறவிருந்த ஒடிசாமாநிலத்தின் புகழ் பெற்ற பூரி ஜெகநாதர்கோவில் ரத யாத்திரைக்கு உச்சநீதி மன்றம் தடை விதித்துள்ளது. கொரோனா ஆபத்து இருக்கும் நேரத்தில் இவ்வாறு தடைவிதிக்காவிட்டால் அந்த பூரி ஜெகநாதரே எங்களை மன்னிக்க மாட்டார் என்றுநீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் குறிப் பிட்டுள்ளனர்.