சென்னை, பிப். 3- சென்னை அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது. சென்னை அயனாவரத்தில் உள்ள தனியார் அடுக்குமாடி குடி யிருப்பில், 11 வயது சிறுமி பாலி யல் வன்கொடுமை செய்யப் பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்ப டுத்தியது. காவல்துறை விசார ணையில் சிறுமி தொடர்ந்து பல நாட்களாக பாலியல் வன்கொ டுமை செய்யப்பட்டது தெரிய வந்தது. இது தொடர்பாக அடுக்கு மாடி குடியிருப்பின் லிப்ட் ஆப ரேட்டர் ரவிக்குமார், சுரேஷ், எரால்பிராஸ், அபிஷேக், சுகு மாரன், முருகேசன், பரமசிவம், ஜெய்கணேஷ், பாபு, பழனி, தீன தயாளன், ராஜா, சூர்யா, குண சேகரன், ஜெயராமன், உமாபதி ஆகிய 17 பேரை காவல்துறையி னர் கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூலை மாதம் கைது செய்தனர். இவர்கள் மீது போக்சோ சட்டம் மற்றும் பாலியல் வன் கொடுமை, காயம் ஏற்படுத்துதல், கும்பல் பாலியல் வன்கொடுமை, கொலை முயற்சி, கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 17 பேர் மீதான குண்டர் சட்டத்தை 2019 ஆம் ஆண்டு ஜனவரி 11 ஆம் தேதி உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. எனினும் 17 பேருக்கும் ஜாமீன் வழங்கப்படாததால் தொடர்ந்து கடந்த ஒன்றரை வரு டமாக புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
மிகவும் நுட்பமான இந்த வழக்கில் அரசு தரப்பு சிறப்பு வழக் கறிஞராக ரமேஷ் நியமிக்கப் பட்டு, சிறப்பு நீதிமன்ற நீதிபதி மஞ்சுளா முன்பு வழக்கு விசா ரணை நடந்தது. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கி டிசம்பர் வரை 11 மாதங்கள் விசாரணை நடைபெற்றது. தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப் பட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணை யின் போது, குற்றம் சாட்டப்பட்ட வர்கள் தரப்பில் 7 சாட்சிகளும், 36 அரசு தரப்பு சாட்சிகளும் விசா ரிக்கப்பட்டு, 120 ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. குற்றம் சாட்டப்பட்ட 17 பேரில் பாபு என்ப வர் உடல்நலக் குறைவால் உயிரி ழந்து விட்டார். மீதமுள்ள 16 பேருக்கு எதிரான வழக்கில் கடந்த வாரம் தீர்ப்பு வழங்கப் பட்டது. இதையடுத்து குற்றம் சாட்டப்பட்ட தோட்டக் காரர் குண சேகரன் தவிர மற்ற 15 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது. தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து சென்னை சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் 15 குற்றவாளிகளும் திங் களன்று (பிப்.3) நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டனர். ரவிக்குமார், சுரேஷ், அபிஷேக், பழனி ஆகிய 4 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கப் பட்டுள்ளது. மேலும் 9 பேருக்கு 5 ஆண்டுகள் சிறை, ஒருவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப் பட்டுள்ளது. சிறார் பாலியல் வன் கொடுமை தடுப்புச் சட்ட வழக்கு களை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பை அளித் துள்ளது.