கடந்த நான்கரை ஆண்டு மத்திய பாஜக அரசும்,செல்வி ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு மத்திய அரசின் ஊது குழலாக இயங்கி வரும்தமிழக அரசும் அமல்படுத்துகின்ற மக்கள் விரோத கொள்கைகளை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டிய நேரம் இது.ஆட்சிக்கு வருவதற்கு முன்பு வெளிநாட்டில் உள்ளகருப்புப்பணம் முற்றிலும் கைப்பற்றப்படும். அது இந்தியமக்கள் வங்கிக் கணக்கில் தலா 15 லட்சம் முதலீடு செய்யப்படும் என அறிவித்து ஏமாற்றி ஆட்சிக்கு வந்தார்கள். ஆனால் ஏமாற்று பாஜகவை ஆட்சியில் அமர்த்தியவர்கள் ஏமாந்து போனார்கள்.
வேலைவாய்ப்பு
அதேபோன்று வருடத்திற்கு 2 கோடி வேலை வாய்ப்பு உருவாக்குவோம். வேலையின்மையை இந்நாட்டில் அடியோடு ஒழிப்போம் என்றவர்கள் ஆட்சிக்கு வந்தப்பிறகு இன்று எந்தளவு வேலை வாய்ப்பை அழித்தார்கள்.வேலையின்மையென்பது கடுமையான தலையாய பிரச்சனையாகி இன்று இந்தியா தத்தளிக்கின்றது.பாஜக ஆளும் உத்தரப்பிரதேசத்தில் அதன் ஆழத்தைப் பார்ப்போம். அவ்வாட்சியில் 368 அலுவலக உதவியாளர் பணியிடங்கள் நிரப்ப விண்ணப்பங்களை அவ்வரசு கோரியது. இதற்கு தகுதி எட்டாம் வகுப்பு தேர்ச்சிபெற்றிருக்க வேண்டும். மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும். 368 பணியிடங்களுக்கு 23 லட்சம் விண்ணப்பங்கள் வந்தன. அதில் கொடுமை என்னவென்றால் பொறியாளர்கள் மட்டும் 2.22 லட்சம் பேர். மேலும் முனைவர்கள் 255 பேர்.அதேபோன்று ரயில்வேயில் 1-9 லட்சம் நான்காம் நிலைபணியிடங்களுக்கு மனு செய்தவர்கள் 4.65 கோடி பேர்.வேலை வாய்ப்பு விகிதம் தொடர்பான ஆய்வறிக்கையை இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் வெளியிட்டுள்ளது. அதாவது கடந்த இரண்டாண்டுகளில் இல்லாத அளவிற்கு பிப்ரவரி மாதத்தில் வேலையின்மை என்பது மிகக் கடுமையாக உயர்ந்துள்ளது. அதாவது 5.9 விழுக்காடு. துல்லியமாகச் சொல்ல வேண்டுமானால் கடந்தாண்டு பிப்ரவரியில் இந்தியாவில் வேலை செய்தவர்கள் 406 மில்லியன். ஆனால் இந்த ஆண்டு பிப்ரவரியில் பணியாற்றுபவர்கள் எண்ணிக்கை 400 மில்லியன். அதாவது ஓராண்டில் 6மில்லியன் பேர் வேலையை இழந்தனர்.
அது எப்படி?
ஆட்சிக்கு வந்தவுடன் யாரையும் கலந்தாலோசிக்காமல் ரூ.1000, ரூ.500 நோட்டுக்கள் செல்லாது என்று திடீரென்று அறிவித்தனர். இதனால் கள்ளப்பணம், கறுப்புப்பணம், தீவிரவாதம் ஒழிந்தது என்றனர். ஆனால் நடந்ததுஎன்ன? ஏழை, எளிய நடுத்தர மக்களின் வாழ்வாதாரம் கபளீகரம் செய்யப்பட்டது.ஒரே ஒரு 2000 ரூபாய் நோட்டு வாங்க இந்த நாட்டு மக்கள் அனைவரும் ஏடிஎம் முன்பு நாட்கணக்கில் நீண்டவரிசையில் நின்றனர். நிச்சயிக்கப்பட்ட பல திருமணங்கள்நின்றன. நோய்வாய்ப்பட்டவர்கள் மருத்துவ சிகிச்சை பெறமுடியவில்லை. மன உளைச்சலில் 150க்கும் மேற்பட்டவர்கள் இறந்தனர்.ஆனால் மறுபக்கம் நடந்தது என்ன? செல்லாது எனஅறிவிக்கப்பட்ட அன்றே குஜராத்தில் ஒரு சொசைட்டியில்அதன் தலைவரான பாஜகவின் தலைவர் அமித்ஷாவின் பெயரில் ரூ.750 கோடி முதலீடு செய்யப்பட்டது. அது எப்படி?தமிழகத்தில் சேகர் ரெட்டி மற்றும் முன்னாள் தமிழக தலைமைச் செயலாளர் மகன் வீட்டில் பல கோடி புத்தம்புதிய ரூ.2000 நோட்டுகள் கைப்பற்றப்பட்டன. அது எப்படி?சொன்னது நடக்கவில்லை. மாறாக இந்திய முதலாளிகள் பணம் சுவிஸ் வங்கியில் செல்லாது என அறிவித்தஓராண்டில் 50 சதவீதம் அதாவது 7000 கோடி உயர்ந்துள்ளதுஎன அவ்வங்கியின் நிர்வாகமே கூறியுள்ளது.
விவசாயிகளின் கடனும் கார்ப்பரேட்டுகளின் கடனும்
அதே நேரத்தில் இந்திய நாட்டு வங்கிகளில் பல்லாயிரம் கோடி கடன் பெற்ற நீரவ் மோடி, மல்லையா போன்றவர்கள் அவ்வங்கிகளை திவாலாக்கி விட்டு மத்திய ஆட்சியின் உறுதுணையோடு உல்லாசமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.இதனால் திவாலான ஐடிபிஐ போன்ற வங்கிகளில் 51 சதவீத பங்குகளை நமது பொதுத்துறை நிறுவனங்களின் தலையில் கட்டுகின்றார்கள் இது என்ன நியாயம்? பாஜக ஆட்சியில் விவசாயிகள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டனர். விளை பொருட்களுக்கு கட்டுப்படியாகாத விலை, கடன் சுமை தாங்க முடியாது. பல ஆயிரம்பேர்கள் பாதிப்பிலிருந்து மீள முடியாமல் தற்கொலையைதேர்ந்தெடுத்தனர். பல கட்ட போராட்டங்கள். ஆனால்அவர்களை சந்தித்துப் பேசக் கூட பிரதமர் மோடியால் நேரம் ஒதுக்க முடியவில்லை. அவர்கள் நாடு பூராவும் வங்கியில் பெற்றிருக்கின்ற கடன் ஒரு லட்சம் கோடிதான். அதனை ரத்து செய்ய வேண்டும் என்பதே அவர்கள் பிரதான கோரிக்கை.ஆனால் அதற்கு செவி மடுத்த பாஜக அரசு, மறுபக்கம்பெரும் முதலாளிக்கு இந்த நாட்டையே கூறு போட்டு விற்கின்றது.இந்தியாவில் 4387 பேரிடம் வங்கிக்கடன் ரூ.8.6 லட்சம்கோடி உள்ளது. இதில் 90 சதவீதம் வராக்கடன். அதில்ரூ.5 லட்சம் கோடியை விரல்விட்டு எண்ணக்கூடியவர்களுக்கு தள்ளுபடி செய்துள்ளது.
200 சதவீதம் விலை உயர்வு
அதே நேரத்தில் இந்திய நாட்டு வங்கிகளில் பல்லாயிரம் கோடி கடன் பெற்ற நீரவ் மோடி, மல்லையா போன்றவர்கள் அவ்வங்கிகளை திவாலாக்கி விட்டு மத்திய ஆட்சியின் உறுதுணையோடு உல்லாசமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.இதனால் திவாலான ஐடிபிஐ போன்ற வங்கிகளில் 51 சதவீத பங்குகளை நமது பொதுத்துறை நிறுவனங்களின் தலையில் கட்டுகின்றார்கள் இது என்ன நியாயம்? பாஜக ஆட்சியில் விவசாயிகள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டனர். விளை பொருட்களுக்கு கட்டுப்படியாகாத விலை, கடன் சுமை தாங்க முடியாது. பல ஆயிரம்பேர்கள் பாதிப்பிலிருந்து மீள முடியாமல் தற்கொலையைதேர்ந்தெடுத்தனர். பல கட்ட போராட்டங்கள். ஆனால்அவர்களை சந்தித்துப் பேசக் கூட பிரதமர் மோடியால் நேரம் ஒதுக்க முடியவில்லை. அவர்கள் நாடு பூராவும் வங்கியில் பெற்றிருக்கின்ற கடன் ஒரு லட்சம் கோடிதான். அதனை ரத்து செய்ய வேண்டும் என்பதே அவர்கள் பிரதான கோரிக்கை.ஆனால் அதற்கு செவி மடுத்த பாஜக அரசு, மறுபக்கம்பெரும் முதலாளிக்கு இந்த நாட்டையே கூறு போட்டு விற்கின்றது.இந்தியாவில் 4387 பேரிடம் வங்கிக்கடன் ரூ.8.6 லட்சம்கோடி உள்ளது. இதில் 90 சதவீதம் வராக்கடன். அதில்ரூ.5 லட்சம் கோடியை விரல்விட்டு எண்ணக்கூடியவர்களுக்கு தள்ளுபடி செய்துள்ளது.200 சதவீதம் விலை உயர்வு
5000 - 50 ஆனது
திருப்பூர், இந்தியாவில் மிகப்பெரிய அளவில் பின்னலாடை ஏற்றுமதியில் செல்வத்தை பெரும் அளவில் நமது நாட்டிற்கு ஈட்டி தந்தது. பழைய பேருந்து நிலையத்தில் பாக்கெட் தைப்பது, காஜா எடுப்பது என 5000 கடைகள் இருந்தன. இன்று 50 கடை மட்டுமே என சுருங்கிவிட்டது.ஆனால் இவ்வரிவிதிப்பில் இந்த ஒரு ஆண்டில் கார்ப்பரேட்டுகள் இந்தியாவில் கொழுத்து வளர்ந்துள்ளனர்.
முகேஷ் அம்பானி 67 சதவீதம்
கவுதம் அம்பானி 66 சதவீதம்
பாபாராம்தேவ் 173 சதவீதம்
அமித்ஷா மகன் 16000 சதவீதம்
இப்படி ஒரு பக்கம் சிறு, குறு தொழில்களை முற்றிலும் அழித்து, பெரும் முதலாளிகளுக்கு இத்திருநாட்டை கூறுபோட்டு விற்கின்றார்கள்.மேலும் பாஜக அரசு தனது ஆட்சிக் காலத்தில் அனைத்தையும்நிர்மூலமாக்கி தேச ஒற்றுமையை, மத நல்லிணக்கத்தைச் சீரழித்து பாசிசத்தை நோக்கி நாட்டை கொண்டு செல்கின்றது. இதனை முழுமையாக தமிழகத்தில் எடப்பாடி, ஓபிஎஸ் அரசும் தாளம் போட்டு ஆதரிக்கின்றது.எனவே வரும் ஏப். 18 அன்று மக்கள் நலன்காக்க, மதநல்லிணக்கத்தை ஏற்படுத்த, பொதுத்துறையை பாதுகாக்க, கார்ப்பரேட்டுகளுக்கு முழு இந்தியாவையும் விலைபேசி விற்கும் இந்த அரசையும் அதற்கு பல்லக்குத் தூக்கும் தமிழக அரசையும் வீழ்த்தி ஏழை, எளிய மக்களின்நலன் காக்கும் மாற்றுக் கொள்கை உடைய அரசை ஏற்படுத்துவது அவசியமாகும்.நாமும் நமது குடும்பம் மட்டுமல்ல, மற்ற அனைவரும்அதே பார்வையோடு வாக்களிப்பது தலையாய கடமையாகும்.இதுவே இன்றைய தலையாய பணி. இம்முறை இதனை தவறவிட்டால் எதிர்காலம் பாசிசத்தை தான் காணும். எச்சரிக்கையோடு பணிபுரிவோம்.
மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து தமிழ்நாடு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க மாநிலத் தலைவர் நெ.இல.சீதரன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். சங்கத்தின் மாநில பொருளாளர் என்.ஜெயச்சந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகளும் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்