சிஐடியு போராட்டம் வெற்றி
மாமல்லபுரம்,அக்.26- கடந்த ஒரு மாதமாக வாழ்வாதாரத்தை இழந்திருந்த மாமல்லபுரம் சாலையோர கடை வியாபாரிகளுக்காக சிஐடியு நடத்திய போராட்டத்தை தொடர்ந்து வியாபாரம் செய்து கொள்ள பேரூராட்சி நிர்வாகம் இடம் ஒதுக்கீடு செய்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்ல புரத்தில் பல்லவ மன்னர்களின் சிற்பக்கலை களான கடற்கரை கோயில், அர்ஜூனன் தபசு, ஐந்து ரதம் உள்ளிட்ட சிற்பங்களைக் கண்டு ரசிப்பதற்காக, வெளிநாட்டிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வதால், சர்வதேச சுற்றுலாத் தலமாக விளங்கி வரு கிறது. இதனால் சாலையோரங்களில், கை வினையில் தயாரிக்கப்பட்ட அழகு சாதன பொருட்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் உள்பட பல்வேறு கடைகளை அமைத்து சிறு வியாபாரிகள் தங்களின் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பிரதமர் மோடி, சீன ஜனாதிபதி ஜீ ஜின்பிங் ஆகியோர் இம்மாதம் 11 ஆம் தேதி மாமல்லபுரத்துக்கு வருகை தந்தனர். அப்போது, இங்குள்ள கலைச் சின்னங்களை கண்டு ரசித்தனர். இரு நாட்டு தலைவர்களின் வருகைக்காக மாமல்லபுரத்தில் பல்வேறு கட்டமைப்பு பணி கள் மேற்கொள்ளப்பட்டன. இதில், வெண் ணெய் உருண்டை பாறை, ஐந்துரதம், கடற் கரை கோயில் செல்லும் சாலையின் ஓரங்க ளில் அமைந்திருந்த சிறு வியாபாரிகளின் கடைகள் அகற்றப்பட்டன. மேலும், தலை வர்கள் வந்து சென்றதும் மீண்டும் கடைகள் அமைத்துக்கொள்ளலாம் என பேரூராட்சி நிர்வாகம் தெரிவித்திருந்தது. ஆனால், தலைவர்கள் வந்து சென்ற பின்னர் சாலையோரங்களில் கடைகள் அமைக்கப் பேரூராட்சி நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை. இதனால், நரிக்குற வர்கள் உள்படச் சிறு வியாபாரிகள் தங்க ளின் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்ற னர். மேலும், மீண்டும் கடைகள் அமைக்க அனுமதிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சி யரிடம், முறைசாராத் தொழிலாளர்கள் சங்கம் (சிஐடியு) சார்பில் மனு அளிக்கப்பட்டது. ஆனால், நடவடிக்கை இல்லை. இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்ட முறைசாராத் தொழிலாளர் சங்கம் (சிஐடியு) சார்பில் மாவட்ட துணைச் செயலாளர் முரளி தலைமையில், பேரூராட்சி அலுவலகம் முன்பு வியாபாரிகளின் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. அப்போது, அனைவருக்கும் அடையாள அட்டை வழங்க வேண்டும், பல ஆண்டுகளாக வியாபாரம் செய்து வரும் சிறு வியாபாரிகளை வெளியேற்றக் கூடாது, வியாபாரிகளை முறையாகக் கணக்கெ டுத்து பிரதிநிதித்துவப்படுத்தி வியாபாரி கள் குழுவை அமைக்க வேண்டும், சுற்று லாப் பயணிகளுக்கு இலவச குடிநீர், கழி வறை வசதிகளை ஏற்படுத்த வேண்டும், அர்ச்சுனன் தபசு பகுதியில் பொதுமக்கள் செல்லாத வகையில் தடுப்பு ஏற்படுத்தி யுள்ளதை அகற்றவேண்டும் என்று வலி யுறுத்தினர்.
சிஐடியு மாவட்டச் செயலாளர் இ. முத்துக்குமார், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் இ.சங்கர், முறை சாரா தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் இ.ராமமூர்த்தி, மாவட்டச் செயலா ளர் க.பகத்சிங் தாஸ், மார்க்சிஸ்ட் கட்சி யின் திருக்கழுக்குன்றம் பகுதி செயலாளர் எம்.குமார், திருப்போரூர் பகுதி செயலா ளர் எம்.செல்வம் உள்ளிட்ட பலர் பேசி னர். இதனைத் தொடர்ந்து, பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் திருக்கழுக் குன்றம் வட்டாட்சியர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், ஐந்து ரதம் பகுதியில் வியாபாரம் செய்தவர்கள் பாறை பகுதியில் உள்ள நுழைவுக் கட்டணம் வழங்கும் இடத்திலும், கலங்கரை விளக்கம் பகுதி யில் வியாபாரம் செய்தவர்கள் அப்பகுதி யில் உள்ள சிற்பக் கல்லூரிக்கு சொந்த மான இடத்திலும், அர்ச்சுனன் தபசு மற்றும் வெண்ணெய் உருண்டை பாறை பகுதியில் வியாபாரம் செய்தவர்கள் அதன் எதிர் புறத்தில் உள்ள வாகன நிறுத்துமிடம் பகுதி யிலும் வியாபாரம் செய்து கொள்ளலாம். கடற்கரை கோயில் பகுதியில் வியா பாரம் செய்தவர்கள் அப்பகுதியில் உள்ள வாகன நிறுத்துமிடம் பகுதியிலும், கடற் கரை பகுதியில் வியாபாரம் செய்தவர்கள் கடற்கரை கோயில் சுற்றுச்சுவரின் ஓரமாக வும் விற்பனை செய்துகொள்ள அரசு இடம் ஒதுக்கித் கொடுத்தனர். அக்டோபர் 27 ஆம் தேதி முதல் வியாபாரிகள் கடையை அமை த்துக் கொள்ளலாம் எனவும் உடன்பாடு எட்டப்பட்டது.