tamilnadu

சாலையோர கடைகள் ஒதுக்கீட்டில் முறைகேடு சேலம் மாநகராட்சியை கண்டித்து வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்

சேலம், செப். 22- சேலம் மாநகராட்சியில் சாலையோர கடைகள் ஒதுக் கீடு செய்ததில் நடைபெற்ற முறைகேட்டை விசாரிக்க தனிக் குழு அமைக்க வேண்டும். மாநகராட்சி ஆணையாளரிடம் விசாரணை நடத்திட வேண்டும்  என வலியுறுத்தி சேலத் தில் சாலையோர வியாபாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட் டனர். சேலம் மாநகராட்சியில் சாலையோரம் மற்றும் திரு மணிமுத்தாறு ஆற்றோரம் வியாபாரிகளுக்கு கடை ஒதுக் கீடு செய்வதில் மிகப்பெரிய முறைகேடு நடைபெற்றதாக கூறப்படுகிறது. குறிப்பாக, அதிகாரிகள் லஞ்சம் வாங்கிக் கொண்டு பணம் கொடுத்தவர்களுக்கு மட்டுமே கடைகள் ஒதுக்கீடு செய்யததாகவும், நியாயமான வியாபாரிகளுக்கு கடை ஒதுக்காததால் நூற்றுக்கணக்கான சாலையோர வியா பாரிகள் வாழ்வாதாரம்  இழந்து தவிப்பதாகவும் குற்றச் சாட்டு எழுந்துள்ளது.

 இந்நிலையில், மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து சாலையோர வியாபாரிகள்  மாவட்ட ஆட்சியர் அலுவல கம் எதிரே ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டனர். இதில், சேலம் மாநகராட்சியில் சாலையோர கடைகளை ஏலம் விட்டதில் நிகழ்ந்துள்ள முறைகேட்டை விசாரிக்க தனிக்குழு அமைக்க வேண்டும். முறைகேட்டில் ஈடுப்பட்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். வாழ் வாதாரம் இழந்து தவிக்கும் சாலையோர வியாபாரிகளுக்கு முறையாக கடை ஒதுக்கீடு செய்ய வேண்டும். மாநக ராட்சி ஆணையாளர் மீது விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை வலியு றுத்தி முழக்கங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட சாலையோர வியாபாரிகள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப் பினர்.