சாலையோர விற்பனையாளர்கள் சங்க பேரவையில் கண்டனம்
சேலம்,செப்.26- சேலம் புதிய பேருந்து நிலையம் பகுதியில் இருந்த கடைகளை சட்டத் திற்குப் புறம்பாக அப்புறப்படுத்திய சேலம் மாநகராட்சி நிர்வாகம், காவல் துறையினருக்கு சாலையோர வியா பாரிகள் சங்கம் (சிஐடியு) கண்டனம் தெரிவித்துள்ளது. சேலம் மாவட்ட சாலையோர விற் பனையாளர்கள் சங்கத்தின் மாவட்ட பேரவைக் கூட்டம் வி.பி.சிந்தன் நினை வகத்தில் வியாழனன்று நடை பெற்றது. இக்கூட்டத்திற்கு சங் கத்தின் மாவட்டத் தலைவர் எம்.குண சேகரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பி.தனசேகரன், பொருளாளர் டி.பிரகாசம் ஆகியோர் அறிக்கை சமர்ப்பித்து பேசினர். சிஐடியு மாவட்டச் செயலாளர் டி. உதயகுமார், மாவட்ட பொருளாளர் வி. இளங்கோ ஆகியோர் சிறப்புரை யாற்றினர். இப்பேரவையில் சேலம் புதிய பேருந்து நிலையம் பகுதியில், 30 குடும் பத்தினர் சாலையோரங்களில் சிறிய கடைகளை நடத்தி வருகின்றனர். இதன்மூலம் கிடைக்கும் சொற்ப வரு மானத்தை கொண்டு தங்களின் வாழ்வாதார தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு எந்த விதமான முன்னறிவிப்பும் இல்லாமல் அராஜகமான முறையில் சேலம் மாநக ராட்சி நிர்வாகமும், காவல் துறையும் சாலையோர கடைகளை அப்புறப் படுத்தியது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர், மாநகர காவல் ஆணையாளர் மற்றும் உதவி ஆணையாளர் ஆகியோரிடம் நேரில் பலமுறை மனு கொடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. எனவே, சாலையோர வியா பாரிகளை அராஜக முறையில் நடத்தும் சேலம் மாநகராட்சி, காவல் துறையினரையும் கண்டிப்பதுடன், சாலையோரத்தில் வியாபாரம் செய்யும் வியாபாரிகளுக்கு உரிய அனுமதி வழங்க வேண்டும் என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.
புதிய நிர்வாகிகள் தேர்வு
இதைத்தொடர்ந்து சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப் பட்டனர். இதில் தலைவராக பி.விஜய லட்சுமி, செயலாளராக பி.தன சேகரன், பொருளாளராக எஸ்.கார்த்திக், துணைத் தலைவர்களாக ஆர்.எ.முருகன், டி.வரதராஜன், சி. மாணிக்கம், துணை செயலாளர்களாக டி.பிரகாசம், ராஜா, செல்வி உள்ளிட்ட 18பேர் கொண்ட மாவட்டக்குழு தேர்ந்தெடுக்கப்பட்டது.