tamilnadu

img

தெருநாய் தொல்லை ஆக.17-ல் சேலம் மாநகராட்சி அலுவலகம் முற்றுகை வாலிபர் சங்கம் அறிவிப்பு

சேலம், ஆக.8- தெருநாய் தொல்லை அதிகரித்துள் ளதை கண்டித்து ஆக.17 ல் சேலம் மாநக ராட்சி அலுவலகத்தை முற்றுகையிடு வது என வாலிபர் சங்க பேரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தின் சேலம் வடக்கு மாநகரப் பேரவை அண்மையில் நடைபெற்றது. இப்பேர வையை மாவட்ட செயலாளர் பி.கணே சன் துவக்கி வைத்து உரையாற்றினார்.

மலைவாழ் இளைஞர் சங்க மாநில பொதுச்செயலாளர் என்.பிரவீன்கு மார், வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் பி.கந்தசாமி மற்றும் மாநிலக்குழு உறுப்பினர் எம்.கற்பகம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இதைத்தொ டர்ந்து புதிய நிர்வாகிகள் தேர்வு செய் யப்பட்டனர். இதில் மாநகரத் தலைவ ராக பி.சதீஷ்குமார், செயலாளராக ஆர்.குருபிரசன்னா, பொருளாளராக டி.மனோகரன், துணைத் தலைவர்க ளாக ஆர்.வி.கதிர்வேல், ஆர்.ரம்யா, எஸ்.சசிக்குமார், துணைச் செயலா ளர்களாக கே.நாகராஜ், கே.ராமச்சந்தி ரன், ஆர்.புருஷோத்தமன் மற்றும் மாந கரக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய் யப்பட்டனர்.

முடிவில், மாவட்டப் பொருளாளர் வி.வெங்கடேஷ் நிறை வுரையாற்றினார். தீர்மானங்கள் முன்னதாக, இப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வரு மாறு, சேலம் மாநகரில் தெருநாய்த் தொல்லையைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆகஸ்ட் 17  ஆம் தேதியன்று சேலம் மாநகராட்சி அலுவ லகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது.

ஊரடங்கால் சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கியில் ஏற்பட்டுள்ள தட்டுப் பாட்டைப் போக்க ஆக.15 ஆம் தேதி யன்று ரத்ததானம் செய்வது. கொரோ னாவை காரணம் காட்டி மற்ற நோய்க ளுக்கு சிகிச்சை அளிக்க மறுக்கக்கூ டாது. இ-பாஸ் முறைகேடுகளை தடுப் பதோடு,இதில் ஈடுபடும் இடைத்தர கர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல் வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டது.