சிவகாசி, மார்ச் 21- விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே உள்ளது சிப்பிப்பாறை.இங்கு வெள்ளையாபுரத்தைச் சேர்ந்த கணேசன் என்பவருக்கு சொந்தமான, மாவட்ட வரு வாய் அலுவலரின் உரிமம் பெற்ற பட்டாசு ஆலை இயங்கி வந்தது. இந்த ஆலையில் ஏற்பட்ட விபத்தில் ஒன்பதுபேர் பலி யாயினர் பத்துபேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்களில் 7 பேர் உடல்கள் சிவகாசி அரசு மருத்துவமனையிலும், இருவரின் உடல்கள் கோவில்பட்டி அரசு மருத்துவமனையிலும் கூராய்வுக்காக வைக்கப் பட்டுள்ளன. வழக்கமாக பட்டாசு ஆலைகளில் வெடி விபத்து ஏற்பட்டு உயிர்ச்சேதம் ஏற்பட்டால், ஆலை நிர்வாகத்தினர் ரூ.5லட்சத்து 50 ஆயிரம் நிவாரணமாக வழங்குவது வழக்கம். அரசுத் தரப்பில் வழங்கும் நிவாரணம் தனியாக வழங்கப்படும்.
இந்த நிலையில் நிவாரணத் தொகை கேட்டு, பட்டாசு தீப்பெட்டி தொழிலாளர் (சிஐடியு) சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எம்.மகாலட்சுமி, மாவட்டத் தலைவர் எம்.சி. பாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர்கள் எம்.சுந்தரபாண்டியன், எஸ்.சரோஜா மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் நிவாரணம் கேட்டு சிவ காசி அரசு மருத்துவமனையில் காத்திருந்தனர். ஆலை நிர்வாகமோ, ரூ.2.50 லட்சம் மட்டுமே நிவா ரணத் தொகை வழங்க முடியும் எனக் கூறியுள்ளது. இத னால், உடலை வாங்க மறுத்து அனைவரும் மருத்துவமனை அருகில் உள்ள சிவகாசி-திருவில்லிபுத்தூர் சாலையில் மறி யலில் ஈடுபட்டனர். சாத்தூர் கோட்டாட்சியர் காளிமுத்து, பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மற்றும் சிஐடியு தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். அதில் உடன்பாடு ஏதும் ஏற்பட வில்லை. இதையடுத்து, சிவகாசி அரசு மருத்துவமனையில் ( மாலை 5.30 வரை ) முற்றுகையிட்டனர்.