சேலம், மே 28- சேலம் அரசு விரைவு போக்கு வரத்து கழக பணிமனையில் விடு முறை மற்றும் ஓய்வு இல்லாமல் தொழிலாளர்கள் பணி செய்ய நிர்பந்திக்கப்படுவதை கண்டித்து அஸ்தம்பட்டி அரசு விரைவு போக்குவரத்து பணிமனை முன்பு சிஐடியு, எல்பிஎப் தொழிற்சங் கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். கொரோனா வைரஸ் பாதிப் பின் எதிரொலியாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு சேலம் அரசு விரைவு போக்குவரத்துப் பணி மனை மூடப்பட்டது. தற்போது, சேலம் மாவட்டம் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்த பகு தியாக மாறியிருப்பதால் குறிப் பிட்ட சில வழித்தடங்களில் பேருந்துகளை இயக்க அரசு நிர் வாகம் முடிவு செய்துள்ளது. இதைத்தொடர்ந்து குறைந்த எண் ண்ணிக்கையில் அருகிலுள்ள ஓட்டுநர்கள், நடத்துனர்கள் மற் றும் பணியாளர்களை கொண்டு பணிமனையை இயக்குமாறு அரசு அறிவுறுத்தியிருந்தது.
ஆனால், இந்த அறிவிப்பிற்கு மாறாக சேலம் விரைவுப் போக்குவரத்து பணி மனை நிர்வாகமானது அனைத்து ஓட்டுநர்கள், நடத்துனர்கள் மற் றும் தொழில்நுட்பப் பணியாளர் கள் என அனைவரும் பணிக்கு வரவேண்டும் எனவும், ஓய்வு இல்லாமல் பணியாற்ற வேண்டு மெனவும் நிர்ப்பந்தம் செய்து வரு கிறது. இது தவிர்க்கப்பட வேண் டும். இதனை கண்டித்தும், இரண்டு நாட்கள் வேலை, இரண்டு நாட் கள் விடுமுறை என்ற அடிப்ப டையில் பணி வழங்க வேண்டும்.நாகர்கோவில் மாவட்டத்தில் உள்ள பணிமனையில் டெக்னிக் கல் தொழிலாளரை கழிவுநீர் கால் வாயை சுத்தம் செய்யச் சொன்ன உதவிப் பொறியாளர் சொக்கலிங் கம் மீது நடவடிக்கை எடுக்க வேண் டுமென வலியுறுத்தி அஸ்தம்பட்டி அரசு விரைவுப் போக்குவரத்து பணிமனை முன்பு சிஐடியு, எல்பி எப் தொழிற்சங்கத்தினர் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சிஐடியு விரைவுப் போக் குவரத்து சங்க மாநில துணைப் பொதுச் செயலாளர் என். முருகே சன், எம்.லியாகத் அலி, சேலம் கோட்ட பொதுச்செயலாளர் ஆர். கிருஷ்ணமூர்த்தி,சாலைப்போக்குவரத்து சங்க மாநில துணைத் தலைவர் எஸ்.கே.தியாகராஜன், எல்பிஎப் தொழிற்சங்க நிர்வாகி வசந்த குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.