கடலூர், ஜூலை 3- என்எல்சி இந்தியா நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளர்களை இன்கோசர்வ் சொசைட்டி யில் இணைக்க வலியுறுத்தி என்எல்சி பொது காண்ட்ராக்ட் தொழிலாளர் ஊழியர் சங்கம் (சிஐடியு) சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. நெய்வேலி மெயின் பஜார் காமராஜர் சிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு ஒப்பந்த தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் டி.அமிர்தலிங்கம் தலைமை தாங்கினார். பணிவழங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 130 தொழிலாளர்கள் உட னடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும், 3 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்களை இன்கோசர்வ் சொசைடியில் இணைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் முழக்க மிட்டனர். நிறைவாக ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தின் பொருளாளர் சண்முகம் நன்றி கூறினார்.