திருச்சிராப்பள்ளி, டிச.21- லிகர் மற்றும் பீர் பெட்டி ஒன்றுக்கு ரூ.8 எனவும், பெட்டிக்குள் பெட்டி ஒன் றுக்கு ரூ.9 எனவும், கவர் இல்லாத பிரிமியர் பெட் டிக்கு ரூ.8 எனவும், வெளி நாட்டு மதுபான பெட்டி ஒன் றுக்கு ரூ.60 எனவும், குடோன் விட்டு குடோன் மாற்றும் போது பெட்டி ஒன்றுக்கு ரூ.15 என வும் கூலியை உயர்த்தி வழங்க வேண்டும். இவற்றை கால தாமத மின்றி வழங்க வலியுறுத்தி டாஸ்மாக் குடோன் சுமைப் பணி தொழிலாளர் (சிஐ டியு) சங்கம் சார்பில் திருச்சி திருவெறும்பூரை அடுத்த துவாக்குடியில் உள்ள டாஸ்மாக் கிடங்கு முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. ஆர்ப்பாட்டத்திற்கு கிளை தலைவர் ஜெயபால் தலைமை வகித்தார். ஆர்ப் பாட்டத்தை விளக்கி சுமைப் பணி சம்மேளன மாநில செயல் தலைவர் குணசேகரன், சிஐ டியு புறநகர் மாவட்டச் செய லாளர் சிவராஜ், மாவட்டப் பொருளாளர் பன்னீர்செல் வம், மண்டல நிர்வாகி ரமேஷ் கண்ணன், செல்ல துரை ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் சுமைப் பணி தொழிலாளர்கள் ஏரா ளமான கலந்து கொண்ட னர்.