districts

img

சட்டவிரோதமாக பணி நீக்கம் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

இராணிப்பேட்டை மாவட்டம் புளியந்தங்கள் பகுதியில் உள்ள டாட்டா இன்டர்நேஷனல் லிமிடெட் (பாஜ்ஜி டிவிஷன்)  நிறுவன தொழிலாளர்களை விசாரணை என்ற பெயரில் சட்டவிரோதமாக பணி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து தொழிற்சாலை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தொழிற் சங்கத் தலைவர் எம்.பி.ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் ஆர்.மணிகண்டன், எல்.சி.மணி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.