சேலம்,ஏப்06- சேலம் மாவட்ட நாடக நடிகர்கள் சங்கத்தில் 270 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். ஏற்கனவே வாழ்வாதாரத்தில் மிகவும் பின்தங்கியுள்ள நாடக நடிகர்கள் தற்போது கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையால் அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. இந்நிலையில் சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பில் கொரோனா நிவாரணமாக 270 நாடக நடிகர்களுக்கு அரிசி, எண்ணெய், பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது. இதனை மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன் மற்றும் சேலம் தெற்கு சட்டமன்ற உறுப்பினரும் நாடக நடிகர் சங்க பொருளாளருமான சக்திவேல் ஆகியோர் வழங்கினர். உடன் சேலம் மாநகர காவல் ஆணையாளர் செந்தில்குமார் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபா கணிக்கர் ஆகியோர் இருந்தனர்.