குழித்துறை, ஜுலை 4- குமரி மாவட்டத்தில் கடந்த சில வாரங்க ளாக கொரோனா பரவல் அதிகரித்து வரு கிறது. குறிப்பாக கடலோர பகுதிகளான தூத்தூர் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் தினந்தோறும் 20- முதல் 30 வரை எண்ணிக்கை யிலான மக்கள் பாதிக்கப் படுவதால் அதனை சுற்றியுள்ள மீனவ கிராம பகுதிகளை தமிழக அரசு ஹாட் ஸ்பாட்டாக அறிவித்துள்ளது. குழித்துறை அருகே கழுவன் திட்டை ஆர்.சி தெரு மீனவ மக்கள் வசிக்கின்ற |பகுதி யில் மூன்று நாட்களுக்கு முன்பு முதற் கட்ட மாக தாய் மற்றும் குழந்தைகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்த செய்யபட்ட பரிசோத னையில் அப்பகுதியில் 20 பேருக்கு கொரோ னா உறுதியானது. இதனைத் தொடர்ந்து அப்பகுதி முழுவதும் மக்கள் வெளியே வர தடை செய்யபட்டது. இந்நிலையில் சனி யன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மார்த்தாண்டம் வட்டார குழு செயலாளர் அனந்த சேகர் , முன்னாள் நகர்மன்ற உறுப்பி னர்கள் சுனில் குமார் , சர்தார்ஷா மற்றும் முருகேஷன், ஜினோ, அமலா புஷ்பம் மற்றும் கட்சி நிர்வாகிகள் நிவாரண பொருட்களை வழங்கினர்.