தருமபுரி, ஏப்.19- எர்ரபையனஅள்ளி ஊராட்சியில் கட்டுமான தொழிலாளர்களுக்கு கொரோனா நிவாரண உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டது நல்லம்பள்ளி ஒன்றியம் எர்ரபையனஅள்ளி ஊராட்சி சந்தாரப்பட்டி கிராமத்தில் தமிழக அரசு சார்பில் கட்டுமான தொழிலாளர்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன. ஊராட்சி மன்ற தலைவர் சிலம்பரசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கிராம நிர்வாக அலுவலர் பார்த்திபன் துணைத்தலைவர் ரஞ்சித் குமார் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முருகேசன் வார்டு உறுப்பினர் சக்திவேல் தன்னார்வலர்கள் மணி சந்திரன் தென்னரசு முருகேசன் நாகேஷ் கணேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கட்டுமான தொழிலாளர்கள் சமூக இடைவெளி விட்டு தங்களுக்கு அரசு வழங்கிய நிவாரணப் பொருட்களை வாங்கிச் சென்றனர்.