கிருஷ்ணகிரி மாவட்டம் ஐவிடிபி தொண்டு நிறுவனம் சார்பில் திருப்பத்தூர், வேலூர், ஆம்பூர் வாணியம்பாடி பகுதிகளில் உள்ள 210 திருநங்கைகள், குறவர், இருளர் குடும்பங்களுக்கு 25 கிலோ அரிசி உள்ளிட்ட நிவாரண பொருட்களை திருப்பத்தூர் தூய நெஞ்ச கல்லூரியில் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் வழங்கினார். இதில் ஐவிடிபியின் தலைவர் குழந்தை பிரான்சிஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.